7 நாள் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கருணாநிதி
தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஒருவார கால சிகிச்சைக்குப் பின்னர் நேற்று வீடு திரும்பினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி, ஒரு வாரகால சிகிச்சைக்கு பின்னர் நேற்று மாலை வீடு திரும்பினார்.
ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி டிசம்பர் 1-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஒரு வார காலமாக மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதை அடுத்து நேற்று மாலை அவர் வீடு திரும்பியுள்ளார்.

கருணாநிதி மருத்துவமனையிலிருந்து அவரது கோபாலாபுரம் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை அழைத்து சென்றனர்.












Click it and Unblock the Notifications