சோர்வின்றி வலம் வரும் களைப்பறியா கருணாநிதி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
சென்னை: மாவட்டக் கழகத்தின் செயலாளர்களே, முன்னாள் அமைச்சர்களே, தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களே, கழகத்தினுடைய செயல் வீரர்களே, பெரியோர்களே, தாய்மார்களே... இந்த வார்த்தைகளை அந்த 90 வயது வாய்... உதிர்க்கும் வரை அமைதி காக்கும் அந்த பெரும் கூட்டம்...என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே.. என்று சொல்லி நிறுத்தும்போது அப்படி ஒரு 'அப்ளாஸ்'... ஒரு மாபெரும் இயக்கத்தை காலாகாலமாக கட்டிப் போட்டு வைத்திருக்கும் அந்த ஒற்றை வார்த்தைக்காகத்தான் அத்தனை கூட்டம் காத்திருந்தது.
களைப்பறியா அந்த உதயசூரியன் அடுத்தடுத்து அடுக்கடுக்காக அருவியாக கொட்டி முழங்கிய ஒவ்வொரு பேச்சையும் கண் கொத்திப் பாம்பாக உன்னித்துக் கவனித்து ஆர்ப்பரிக்கிறது கூட்டம்..
இந்த வயதிலும் சோர்வறியாமல், தடுமாறாமல், வார்த்தைகளைத் தேடாமல், நீர்வீழ்ச்சி போல பாய்ந்து வரும் வார்த்தைகளையும், டைமிங் வசனங்களையும் .. நாசூக்கான நக்கல் நையாண்டிகளையும் இத்தனை காலமாக கேட்டும், சற்றும் அலுத்துப் போகாமல் தலைவா என்று முழக்கத்துடன் ஆர்ப்பரித்து சந்தோஷித்துக் களைகிறது திமுகவின் தொண்டர் படை.
எல்லாத் தேர்தல்களிலும் பட்டி தொட்டியெங்கும் முழக்கமிடத் தவறாத திமுக தலைவர் கருணாநிதி, இந்த முறை சூறாவளி சுற்றுப்பயணம் போகாவிட்டாலும் கூட அவரது வருகை திமுகவினருக்கு நிம்மதிப் பெருமூச்சு அளிக்கும் தென்றலாக தவழ்ந்து கொண்டுதான் உள்ளது.
வாருங்கள் கருணாநிதியின் சுற்றுப் பயணத்தை ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வரலாம்..

காஞ்சியில் கூடிய கூட்டம்
இது காஞ்சிபுரத்தில் கருணாநிதியின் பிரசாரத்தைப் பார்க்கவும், அவர் பேச்சைக் கேட்கவும் கூடியிருந்த கூட்டம்.

இதயக் கனிக்கு ஒரு அஞ்சலி
அண்ணனின் நினைவிடத்தில் தம்பியின் இதய அஞ்சலி... மலர் தூவி.. மலரும் நினைவுகளை மனதுக்குள் தேக்கியபடி....

இல்லத்துக்குள் ஒரு நினைவு உலா
அண்ணாவின் நினைவிடத்திற்குள் சகாக்களுடனும், துணைவியாருடனும் ஒரு நினைவு உலா.

மடை திறந்த பேச்சு
இது காஞ்சிபுரம் பிரசார மேடையில்.. பிரசார உரை நிகழ்த்தியபோது....

வெளியில் வெயில்.. வேனுக்குள் சூரியன்
வெளியில் தகிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல்,. வேனுக்குள் அமர்ந்திருக்கும் சூரியனை தரிசிக்க அலை மோதும் தொண்டர் கூட்டம்...

இது கைவிடாத 'கை'
அந்தக் 'கை' கைவிட்டாலும் கூட இந்தக் 'கை' என்றென்றும் உன்னைக் கைவிடாது என்று புன்னகை பூக்க தொண்டர்களைப் பார்த்து கையசைக்கிறாரோ...!

திருப்பெரும்புதூரில் திரண்ட இளம் சூரியன்கள்
இது ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்துப் பிரசாரம் செய்ய வந்த கருணாநிதியைக் காணக் கூடியிருந்த இளைஞர் பட்டாளம்.

அடடே.. போனில் நான் தெரிகிறேனே...!
இது ஓய்வின்போது தன்னைத் தானே பார்த்து ரசிக்கும் ஒரு ஜாலி காட்சி.....
பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. தலைவரை... இது பிரசாரத்தின்போது தொண்டர்கள் சொன்னது!
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications