For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"தலைவர்" வழி தனி வழி... 11வது முறையாக திமுகவின் தலைவராகும் கருணாநிதி!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவராக 11வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார் கருணாநிதி. தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சியின் தலைவராக அதிமுக முறை இருந்தவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் இது சாதனையாக பார்க்கப்படுகிறது.

பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு திமுகவை வழி நடத்தி வரும் கருணாநிதி 90 வயதைத் தாண்டியும் இன்னும் யங்காக.. கிங்கா கட்சியை தலைமை தாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்.

Karunanidhi becomes DMK president for record 11th time

தொய்வில்லாமல், ஓய்வில்லாமல், சோர்வில்லாமல், எவ்வித மயக்கமும் இல்லாமல் அத்தனை எதிர்ப்புகளையும் சிரித்தபடி எதிர்கொண்டு நேர்த்தியாக அவற்றை துரத்தியடித்து அசரடித்துக் கொண்டிருக்கும் முக்கிய அரசியல் தலைவர்களில் இந்த அஞ்சுகச் செல்வருக்கு முக்கிய இடம் உண்டு.

கருணாநிதி கட்சித் தலைவராக 11வது முறையாக தேர்ந்தெடுக்கப்படும் இந்த நேரத்தில் அவர் இதற்கு முன்பு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த ஒரு பார்வை இது...

திமுக தலைவராக - 27.7.1969 அன்று நடைபெற்ற 4வது பொதுக்குழுவில், முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

அதனைத் தொடர்ந்து, ரண்டாவது முறையாக 7.7.1974 அன்று நடைபெற்ற 5வது பொதுக்குழுவில் அவர் தேர்வானார்.

மூன்றாவது முறையாக, 18.6.1978 அன்று நடைபெற்ற 6வது பொதுக்குழுவில் தலைவர் பதவியில் அவர் அமர்ந்தார்.

நான்காவது முறையாக, 25.6.1983 அன்று நடைபெற்ற 7வது பொதுக்குழுவில் கருணாநிதியை தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.

ஐந்தாவது முறையாக 2.2.1988 அன்று நடைபெற்ற 8வது பொதுக்குழுவில் தலைவராக ஏற்கப்பட்டார் கருணாநிதி.

ஆறாவது முறையாக, 2.6.1992 அன்று நடைபெற்ற 9வது பொதுக்குழுவிலும், ஏழாவது முறையாக, 27.7.1997 அன்று நடைபெற்ற 10வது பொதுக்குழுவிலும் தலைவரானார் கருணாநிதி.

எட்டாவது முறையாக, 8.4.2000 அன்று நடைபெற்ற 11வது பொதுக்குழுவிலும், ஒன்பதாவது முறையாக 2.4.2003 அன்று நடைபெற்ற 12வது பொதுக்குழுவிலும் கருணாநிதி தலைவாரனார்.

பத்தாவது முறையாக 27.12.2008 அன்று நடைபெற்ற 13வது பொதுக்குழுவிலும் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்க திமுகவின் 14வது பொதுக்குழு நாளை (9.1.2015 - வெள்ளிக்கிழமை) சென்னை -அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. ‪ இதில் கருணாநிதி 11வது முறையாக தலைவராக அறிவிக்கப்படுகிறார்.

English summary
Karunanidhi is all set to become DMK president for record 11th time tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X