கடும் தோல்வியின் பின்னணியில் 91வது பிறந்த நாள் காணும் கருணாநிதி
சென்னை: லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்துள்ள பின்னணியில் திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி அன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கு முன்பாக ஜூன் 2ம் தேதி திமுகவின் உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தனது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் கருணாநிதி விளக்கிப் பேசுவார் என்று தெரிகிறது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. திமுக தான் போட்டியிட்ட 35 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால் கட்சியினர் சோர்ந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் ஜூன் 2ம் தேதி உயர் நிலை செயல்திட்டக் குழு கூடி விவாதிக்கிறது. அடுத்த நாள் கருணாநிதியின் 91வது பிறந்த நாளாகும். இதையொட்டி அன்று மாலை 6 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் - கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் கழகப் பொதுச்செயலாளர் அன்பழகன், தோழமைக் கட்சித் தலைவர்கள் - கழக முன்னணியினர் வாழ்த்துரை வழங்கிடவுள்ளனர். கட்சித் தலைவர் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications