ரயில் கட்டண உயர்வு: கருணாநிதி கடும் கண்டனம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ரயில் கட்டணத்தை நேற்று அதிரடியாக உயர்த்தி அறிவித்தது. இதன்படி ரயில் பயணிகள் கட்டணம் 14.2%, சரக்குக் கட்டணம் 6.5% உயர்த்தப்பட்டுள்ளது.

இக்கட்டண உயர்வு வரும் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. ரயில் கட்டண உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியும் ரயில்வே கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற்று ஏழை எளிய மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications