Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னுடைய ஆருயிர் சகோதரரை இழந்து தவிக்கிறேன்... ஹனீபா மரணம் குறித்து கருணாநிதி வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பாடகர் ஹனீபாவின் மரணத்தால் ஆருயிர் சகோதர் சகோதரரை இழந்து தவிப்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 96.

Karunanidhi condolence for Hanifa

பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடத் தொடங்கிய ஹனிபா, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியும், இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். திமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம் வந்தவர் ஹனீபா.

சமீபகாலமாக உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த ஹனீபா, நேற்று சென்னையில் தனது இல்லத்தில் காலாமானார். மறைந்த ஹனீபாவின் உடலுக்கு திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பிரபல பாடகர் எனது நண்பர் இசை முரசு நாகூர் ஹனிபாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியபோது.வாழ்க ஹனிபாவின் புகழ்..!#NagoreHanifa #DMK #Kalaignar #Karunanidhi

Posted by Kalaignar Karunanidhi on Wednesday, April 8, 2015

இந்நிலையில், ஹனீபாவின் இழப்பு குறித்து கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘நாகூர் ஹனிபாவின் மறைவு எண்ணிப் பார்க்க இயலாத பேரிழப்பு. நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இல்லாத தி.மு.க மாநாடே இல்லை என்று கூறும் அளவிற்கு அவரது பங்கு அளப்பரியது. என்றென்றும் கூடவே இருந்த நல்ல நண்பரை இழந்து விட்டோம். என்னுடைய ஆருயிர் சகோதரரை இழந்து தவிக்கிறேன். நீங்கள் சிந்துகின்ற கண்ணீரோடு என்னுடைய கண்ணீரையும் கலந்து, அவருடைய புகழ் என்றென்றும் நிறைந்திருக்க வேண்டும், வாழவேண்டும், வாழ்க ஹனிபா அவர்களின் புகழ்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+