என் மீதும், குடும்பத்தினர் மீதும் அன்பு கொண்டிருந்தவர் மனோரமா... கருணாநிதி உருக்கம்
சென்னை: என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர் நடிகை மனோரமா என்று திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனோரமா மறைவு குறித்து கருணாநிதி தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:
"ஆச்சி" என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட மனோரமா நேற்றிரவு மறைந்து விட்ட செய்தியினை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அவர் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக புகழ்க் கொம்பின் உச்சியிலே வீற்றிருந்த நேரத்திலும், என்பாலும், என் குடும்பத்தினர்பாலும் மிகுந்த அன்பு கொண்டு, குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே இருந்தவர்.

அண்ணா அவர்கள் எழுதிய "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்", நான் எழுதிய "உதய சூரியன்", "மணிமகுடம்", தம்பி சொர்ணம் எழுதிய "விடை கொடு தாயே" போன்ற நாடகங்களில் "அல்லி" போன்ற சிறப்பான பாத்திரங்களை ஏற்று கழக மாநாடுகளில் எல்லாம் நடித்ததன் மூலம், திராவிட இயக்க நடிகையாகவே கருதப்பட்டவர் மனோரமா.
1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து "கின்னஸ்" உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் என்பது இவருக்குள்ள தனிப் பெருமை ஆகும். ஆச்சி மனோரமா நகைச்சுவை நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக திரையுலகில் கடந்த ஐம்பதாண்டு காலமாக வாழ்ந்தவர். "பத்மஸ்ரீ" விருது, "புதிய பாதை" திரைப்படத்தின் மூலம் "சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது", தமிழ்நாடு அரசின் "கலைமாமணி விருது" என பல விருதுகளை மனோரமா பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கூட அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வந்தது. அதற்குள் இன்று வந்த அவரது மறைவு திரைப்பட உலகிற்கு ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்புத் தாயை இழந்து வாடும் தம்பி பூபதிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கருணாநிதி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications