கருணாநிதி வைர விழா - Live
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் மற்றும், அவர் சட்டசபையில் 60 ஆண்டுகாலம் பணியாற்றியதை கொண்டாடும் வைர விழா ஆகியவற்றை இணைந்து, சென்னை ஓய்எம்சிஏ மைதானத்தில் இன்று திமுக சார்பில் விழா தொடங்கியது.
-கருணாநிதி வைர விழா நிறைவு பெற்றது
-சுமார் மூன்றரை மணி நேரம் வைர விழா கோலாகலமாக நடைபெற்றது
-ஹிந்தியை நாங்கள் எதிர்க்கவில்லை
-ஹிந்தியை எதிர்த்திருந்தால் நிதீஷ்குமாரை அழைத்திருப்போமா
-ஹிந்தியை திணிக்க கூடாது என்பதே எங்கள் நோக்கம்
-இப்போது மாட்டிறைச்சியை வைத்து கலகம் செய்கிறார்கள்
-இன்னொரு சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் ஏற்படுத்திவிடாதீர்கள்
-போராட்டத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர்
-மக்களுக்காக நீங்கள் தயாரா என மக்கள் கேட்கிறார்கள், அதற்கு விடைதான் இந்த கூட்டம்
-உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்- ஸ்டாலின்
-நாட்டை காவிமயமாக்க எல்லா முயற்சிகளும் நடைபெறுகிறது
-மதசார்பற்ற ஆட்சியை உருவாக்க நாம் ஒன்றிணைய வேண்டும்-ஸ்டாலின் அரைகூவல்
-கருணாநிதி உடல் நலத்தோடு இருந்திருந்தால் கொள்கைக்காக குரல் கொடுத்திருப்பார்
-மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் ஆடக்கூடிய பொம்மைகள் அல்ல திமுக
-கள்ளிக்காட்டை அழிப்பது கள்ளிக்காடு மீதான கோபத்தால் அல்ல, நந்தவனத்தை உருவாக்குவதுதான் நோக்கம்-ஸ்டாலின்
-மத்தியிலுள்ள பாஜக ஆட்சி மதசார்புள்ள நாடாக மாற்ற பாடுபடுகிறது-ஸ்டாலின்
-மதத் தலைவர்கள் தலைமையில் ஒவ்வொரு மாநிலத்தையும் சிக்க வைத்துள்ளனர்
-கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மதசார்பின்மை எனவரும்போது அனைவரும் ஒன்றுபட வேண்டும்
-நமக்குள் எந்த கருத்து வேறுபாடு இருந்தாலும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்பதை விழா மேடை எடுத்து காட்டுகிறது
-இந்தியாவின் ஜனநாயகத்தை காக்க வேண்டியது நமக்கு முன்பு உள்ள பெரும் சவால்- ஸ்டாலின்
-மத்திய அரசு மீது ஸ்டாலின் நேரடி தாக்குதல்
-2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவோம், கருப்பு பணத்தை மீட்போம் என்றனர்
-கருப்பு பணத்தை மீட்டு மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவோம் என்றனர்
-15 ரூபாயாவது மக்கள் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளதா?
-லோக்பால் உருவாக்கப்பட்டுள்ளதா?
-இந்திராகாந்தி, வி.பி.சிங், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் பிரதமராக கருணாநிதி முக்கிய காரணம்
-தேசிய அரசியலை தீர்மானிக்கும் கலங்கரை விளக்கம் கருணாநிதி
-மத்தியிலுள்ள அரசு 3 வருட ஆட்சியில் என்ன செய்துள்ளார்கள்? ஸ்டாலின் கேள்வி
-மத்திய அரசு மக்களை பற்றி கவலைப்பட்டுள்ளார்களா?
-பெரும்பான்மை உள்ள காரணத்தால் எதை வேண்டுமானாலும் செய்துவிடமுடியுமா?
-லோக்சபா தேர்தலின்போது மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
-வி.பி. சிங் காலம் போல பிரதமரை சந்திக்க இப்போது வாய்ப்பு கிடைக்காது ... ஸ்டாலின் கிண்டல்
-கருணாநிதி உடல்நலம் தேறிவருகிறது- ஸ்டாலின்
-விழாவுக்கு கருணாநிதியை அழைத்துவர மருத்துவர்கள் அனுமதியை கேட்டோம்
-உடல்நலம் தேறிவரும் நிலையில் விழாவுக்கு வந்தால் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்
-விழாவுக்கு வராவிட்டாலும் கருணாநிதி நம்மை வழிநடத்த வேண்டும் என்பதால் அவரை அழைத்துவரவில்லை
-திமுகவை கருணாநிதி தொடர்ந்து வழி நடத்த வேண்டும் - ஸ்டாலின்
-வைர விழா அரசியல் கூட்டணிக்கானது என கூறியவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை
-அப்படி விமர்சனம் செய்தவர்களுக்கு அடையாளம் தர நான் விரும்பவில்லை
-இந்த மேடையின் கவுரவத்தை நான் குறைக்க விரும்பவில்லை-ஸ்டாலின்
-1957ல் முதல் முறையாக திமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது
-குளித்துறை தொகுதியில் கருணாநிதியை போட்டியிட அண்ணா உத்தரவிட்டார்
-சென்றார், நின்றார், அந்த தொகுதியில் வென்றார்
-தொடர்ந்து 13 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றவர் கருணாநிதி
-தோல்வி என்பதையே பார்க்காத ஒரே தலைவர் உலகத்திலேயே கருணாநிதி மட்டுமே
-19 ஆண்டுகாலம் முதல்வர் பொறுப்பில் இருந்து அதிலும் சாதனை படைத்தவர்தான் கருணாநிதி
-திராவிட இயக்கம் நூற்றாண்டு விழா காண்கிறது, அதில் 80 வருடங்கள் கருணாநிதி பங்களிப்பு
-விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு ஸ்டாலின் நன்றி
-கருணாநிதி வைர விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றிவருகிறார்
-அகில இந்தியாவிலேயே கருணாநிதியைப் போல தலைவர் இல்லை - பேராசிரியர் அன்பழகன்
-நேரு, அண்ணாவிற்குப் பிறகு மிகப்பெரிய தலைவர் கருணாநிதி - அன்பழகன்
-இந்த நிலைமையை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம்
-கருணாநிதியின் இடத்தை நிரப்ப வேண்டிய பெரும் பொறுப்பு ஸ்டாலினுக்கு உள்ளது
-ஸ்டாலின் சரியான திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறார்-ராகுல் காந்தி
-எனக்கு நம்பிக்கையுள்ளது, கருணாநிதியை போலவே ஒரு காலத்தில் ஸ்டாலினை பற்றி பெருமையாக பேசுவோம்
-நாட்டில் ஒரேமாதிரி கலாசாரம் இருக்க வேண்டும் என்கிறார்கள்
-காங்கிரஸ் கட்சிக்கு இந்த கொள்கையில் துளியும் ஒப்புதல் இல்லை
-ஆர்எஸ்எஸ்சும், மோடியும் ஒரே கலாசாரத்தை திணிக்க முற்படுவதை அனுமதிக்க கூடாது
-பண மதிப்பிழப்பு உத்தரவால் நாட்டு பொருளாதாரம் சரிந்துவிட்டது என்று உலகமே சொல்கிறது
-அருண் ஜேட்லிக்கு இது தெரியவில்லை, சொல்ல மறுக்கிறார்
-பண மதிப்பிழப்பு விவகாரம் குறித்து ஜேட்லியிடம் கூட மோடி ஆலோசிக்கவில்லை
-மத்திய அரசின் தான்தோன்றி தனமான செயல்பாடு இதுதான்-ராகுல்காந்தி
-மத்தியில் இருப்பவர்கள் கலந்துரையாடுவதில் நம்பிக்கை இல்லை-ராகுல் காந்தி
-எதிர் கருத்துக்களை ஒழிப்பதுதான் அவர்கள் நோக்கம்-ராகுல் காந்தி
-யாரையுமே கேட்காமல் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை செல்லாது என அறிவித்தார் பிரதமர்
-கருணாநிதி பேசும்போது தமிழர்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும்
-மம்தாபானர்ஜி, நிதீஷ்குமார், சரத்பவார் ஆகியோரின் பேச்சுக்கள் அவர்கள் மாநிலத்தின் எண்ணத்தை பிரதிபலிக்கும்
-அனைத்து மாநில குரல்களும் ஒன்றாக பேசும்போதுதான் இந்தியா வலிமையாகும்
-கருணாநிதி போட்டியிட்ட அனைத்து தேர்தலிலும் வெல்ல காரணம் உள்ளது
-மக்கள் கருணாநிதி மீதும், கருணாநிதி மக்கள் மீதும் அன்பு வைத்துள்ளனர்
-இதுதான் கருணாநிதியின் பலத்திற்கு காரணம்
-கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்
-மேலும் பல பிறந்த நாட்களை அவர் காண வேண்டும்-ராகுல்காந்தி
-கருணாநிதி வைர விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வாழ்த்துரை
-யார் எதை சாப்பிட வேண்டும் என்பதை 'பிரைவேட் ராணுவம்' தீர்மானிக்கிறது
-தலித்துகள், முஸ்லிம்களுக்கு எதிராக பிரைவேட் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது
-சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுத்தவர் கருணாநிதி-சீதாராம் யெச்சூரி
-வருடத்திற்கு 2 கோடி வேலைவாய்ப்பு தருவதாக மத்திய அரசு உறுதியளித்தது
-தற்போது வேலைவாய்ப்பு அளவு குறைந்து கொண்டு வருகிறது
-மோடி அரசில் ஆண்டுதோறும் சராசரியாக 12 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்
-தமிழக விவசாயிகள் டெல்லியில் எலியை சாப்பிட்டு போராட்டம் நடத்தினர்
-விவசாயிகள், இளைஞர்களுக்கு எந்த விடிவுகாலமும் இந்த ஆட்சியில் இல்லை
-மதரீதியாக மக்களை பிரிப்பது மட்டுமே மத்திய அரசின் வேலையாக உள்ளது- சீதாராம் யெச்சூரி
-வைர விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வாழ்த்துரை
-தற்போதைய மத்திய அரசால் நாட்டுக்கே ஆபத்து
-முதலில் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்றனர்
-இப்போது எதிர்க்கட்சிகள் இல்லாத பாரதம் என்றனர்
-காங்கிரஸ் மட்டுமல்ல எதிர்க்கட்சிகள் இல்லாத நாட்டை பாஜக உருவாக்க முடியாது
-இதை நிரூபிக்கும் வகையில் இந்த மேடையில் அனைவரும் கூடியுள்ளோம்-உமர் அப்துல்லா
-இந்திய அரசியலமைப்பு உரிமைகளை காப்பாற்ற நாம் ஒன்று கூடியுள்ளோம்
-எங்கள் கஷ்டத்தின்போது நீங்கள் உடனிருங்கள், உங்கள் கஷ்டத்தின்போது நாங்கள் துணை இருப்போம்
-எங்கள் கட்சி, மாநிலம் சார்பில் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்
-வைர விழாவில் தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா வாழ்த்துரை
-எனது குடும்பம் கருணாநிதியோடு நீண்ட கால தொடர்பு கொண்டது
-வைர விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி வாழ்த்துரை
-ஒருவர் என்ன சாப்பிட வேண்டும், உடுத்த வேண்டும் என்பது தனிமனித சுதந்திரம்
-இந்த சுதந்திரத்தை மத்திய அரசு தடுத்து மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது
-தமிழகத்தில் மத்திய அரசின் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி நடக்கிறது
-தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசு, உட்காரு என்றால் உட்காருவார்கள், நட என்றால் நடப்பார்கள்
-இன்று மாட்டிறைச்சிக்கு தடை என்பார்கள், நாளை ஆட்டிறைச்சி, மீன் சாப்பாடுக்கும் தடை விதிப்பார்கள்
-புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்துரை
-மாநில கட்சிகள் டெல்லி அரசியலில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்
-மாநில கட்சிகள் டெல்லி செல்ல வேண்டும்
-நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா (தமிழில் பேசினார்)- டெரிக் ஓ பிரைன்
-மாநில மொழிகளுக்கு முக்கியத்துவரம் தர வேண்டும்
-மொழி விவகாரங்களில் கருணாநிதி, மம்தா பானர்ஜி ஒருமித்த கருத்துள்ளவர்கள்
-தமிழ் தமிழகத்திலும், வங்கமொழி மேற்கு வங்கத்திலும் முக்கியத்துவம் பெறப்பட வேண்டும்
-வைர விழாவில் திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரைன் பேச்சு
-கருணாநிதி எழுப்பிய பல பிரச்சினைகளை மேற்கு வங்கமும் எழுப்பியுள்ளது
-கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நிதீஷ்குமார்
-தேசியவாத காங்கிரஸ் எம்.பி மஜித் மேமன் வாழ்த்துரை
-கட்சி தலைவர் சரத்பவார் அனுப்பிய கடிதத்தை வாசித்து காட்டினார் மஜித் மேமன்
-இந்த மேடை மதசார்பற்ற சக்திகள் இணைந்துள்ள மேடை
-மதவாதத்தை எதிர்க்க திராவிட கொள்கை இந்தியாவுக்கு இப்போதைய தேவை
-மேடையில் உள்ள இந்த தலைவர்கள் இணைந்து மதவாதத்தை எதிர்க்க வேண்டும்
-கருணாநிதிக்கு பாரத ரத்னா விருதை வழங்கி தமிழகத்திற்கு செய்த துரோகத்திற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும்
-கருணாநிதி எழுத்தாளர், வலதுசாரி, இடதுசாரி என்பதெல்லாம் இல்லை, அவர் மனிதாபிமானி-காதர் மொய்தீன்
-சிறுபான்மை முஸ்லிம்கள் திமுகவுடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டுள்ளனர்
-சமூக நீதியை காப்பாற்றிய மகா தலைவர் கருணாநிதி
-திமுக தமிழக சட்டசபையை வெல்லப்போகிறது- காதர் மொய்தீன்
-10 வருடங்கள் தொடர்ச்சியாக காங்கிரஸ் கூட்டணி அரசு நல்லாட்சி தந்தது
-கருணாநிதி மேடையில் இருந்திருந்தால் ராகுல் காந்தி செங்கோட்டை செல்வார் என வாழ்த்தியிருப்பார்
-மத்திய அரசு காட்டுமிராண்டிதனத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது
-மத்திய அரசு வரம்புகளை மீறி வரம்பற்ற ஆட்சியாக செல்கிறது
-மத்திய அரசுக்கு கடிவாளம் போடும் பணி தமிழகத்திற்கு உள்ளது
-கருணாநிதிதான் மாநில சுயாட்சி உரிமைக்காக கமிஷன் அமைத்தார்
-மாநில உரிமைகள் பாதுகாக்கப்படும்போதுதான் இந்தியாவுக்கு பெருமை என்றவர் கருணாநிதி
-மாட்டிறைச்சி, நீட் தேர்வு விவகாரங்கள், பிற்படுத்தப்பட்டோர் விவகாரங்களை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது
-கருணாநிதி வைர விழாவில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் உரை
-திமுக மென்மேலும் வளர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் பங்காற்ற வேண்டும்-நிதீஷ்குமார்
-உரையை நிறைவு செய்தார் நிதீஷ்குமார்
-ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராவார் - நிதிஷ்குமார் ஆருடம்
-திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அரசியல் அனுபவம் கொண்டவர்- நிதீஷ்குமார்
-ஸ்டாலின்தான் இந்த மாநில முதல்வராக வருவார் என எனது மனதில் எழுகிறது-நிதீஷ்குமார்
-நிச்சயம் அந்த எண்ணம் நிறைவேறும்
-கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை நிறைவேற்றுவார் ஸ்டாலின்
-பூரண மதுவிலக்கை ஸ்டாலின் அமல்படுத்துவார் என நம்புகிறேன்
-திமுக தமிழகத்தில் பலமான கட்சியாக உள்ளது-நிதீஷ்குமார்
-மது விலக்கை கொண்டுவருவதில் பீகார் முழு வெற்றி பெற்றுள்ளது
-திமுக தேர்தல் வாக்குறுதியில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது
-பூரண மதுவிலக்கால் பீகாரில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன
-ஏழை மக்கள் மதுவிற்காக செலவிட்ட பணம் குறைந்துவிட்டது, விபத்துகள் குறைந்துவிட்டன
-பீகாரில் குற்றங்கள் குறைந்துவிட்டன, நுகர்வு பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை கூடிவிட்டது-நிதீஷ்குமார்
-பெண்கள் நலனுக்காக கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களுக்கு நிதீஷ்குமார் பாராட்டு
-வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினர்
-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் வெளிச்சம் கொண்டுவந்தார்
-மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்க கூடாது என ஒரு பிரிவினர் நெருக்கடி கொடுத்தனர்
-அப்போது மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த வி.பி.சிங்கிற்கு ஆதரவு கொடுத்தார் கருணாநிதி-நிதீஷ்குமார்
-கருணாநிதி பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர்
-விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டம் அதில் ஒன்றாகும்
-கருணாநிதியின் புரட்சிகர கருத்துக்கள் இந்தியாவுக்கே வழிகாட்டி-நிதீஷ்குமார்
-கருணாநிதி 60 வருடம் சட்டசபையில் பணியாற்றியுள்ளார்-நிதீஷ்குமார்
-1957ல் முதல் முறையாக தமிழக சட்டசபை உறுப்பினரானார் கருணாநிதி
-கருணாநிதி தொடர்ந்து சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றவர்
-அகில இந்திய அளவில் கருணாநிதி படைத்த சரித்திரத்தை தகர்க்க முடியாது-நிதீஷ்குமார்
-5 முறை தமிழக முதல்வராக பணியாற்றியவர் கருணாநிதி-நிதீஷ்குமார்
-கருணாநிதி பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி-நிதீஷ்குமார்
-திராவிட இயக்க போராளி கருணாநிதி-நிதீஷ்குமார்
-வைர விழாவிற்கு வருகை தர கனிமொழி நேரில் அழைப்புவிடுத்தார்-நிதீஷ்குமார்
-உரையின்போது தளபதி என ஸ்டாலினை அழைத்த நிதீஷ்குமார்
-வைர விழாவில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் உரை
-இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை கொள்கையை பாராட்ட வேண்டிய காலம் வந்துள்ளது
-இந்தியாவை தற்போது ஒற்றை பரிணாம நாடாக மாற்ற அச்சுறுத்தல் நடக்கிறது-டி.ராஜா
-கருணாநிதி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி பற்றி பேசியவர்
-கூட்டாட்சி நெறிமுறைகளை காலில் போட்டு மிதிக்கும் நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது
-கருணாநிதி இன்று மேடையில் இருந்திருந்தால் மாநில கூட்டாட்சி காப்பாற்றப்பட வேண்டும் என குரல் கொடுத்திருப்பார்
-அப்படி குரல் கொடுக்கும் முதல் தமிழராக கருணாநிதி இருந்திருப்பார்
-மதவெறி அரசியல் இந்தியாவை இன்று அச்சுறுத்திக்கொண்டுள்ளது-டி.ராஜா
-இன்று மேடையில் இருந்திருந்தால் மதவெறிக்கு எதிராக கருணாநிதி குரல் கொடுத்திருப்பார்- டி.ராஜா
-இந்தியாவை மதவெறியில் இருந்து விடுவிக்க ஸ்டாலின் எங்களோடு களத்தில் கை கோர்ப்பார் என நம்புகிறேன்-டி.ராஜா
-ஜாதி, மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகள் அகற்றப்பட வேண்டும் என நினைப்பவர் கருணாநிதி
-சமுதாய மாற்றம் வர வேண்டும் என்று போராடுபவர் கருணாநிதி
-கருணாநிதி ஒரு சமூக போராளி-டி.ராஜா புகழாரம்
-பெரியாருக்கும், காரல் மார்க்சுக்கும் பெரிய இடைவெளி இல்லை-டி.ராஜா
-இவ்விரு கொள்கையாளர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய காலம் ஏற்பட்டுள்ளது-டிராஜா
-இந்த பணியில் ஸ்டாலின் ஈடுபடுவார் என எதிர்பார்க்கிறேன்-டி.ராஜா
-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா உரை
-திமுகவை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது
-திறமையான தலைவராக ஸ்டாலினை நாங்கள் பெற்றுள்ளோம்-துரைமுருகன்
-ராஜதந்திரம் கொண்ட ஸ்டாலின் கட்சியை திறமையாக வழி நடத்துவார்-துரைமுருகன்
-வைரவிழா மேடையில் ஸ்டாலினுக்கு பின் இருக்கையில் கனிமொழி அமர்ந்துள்ளார்
-ராகுல் காந்தி, கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் நேரு குடும்பத்தின் 5வது தலைவராகும்-துரைமுருகன்
-நிதீஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பெயரை கூறி வரவேற்புரையாற்றுகிறார் துரைமுருகன்
-கருணாநிதி வைர விழாவில் துரைமுருகன் உரை
-தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்த தலைவர்
-தமிழின தலைவராக உள்ளவர் கலைஞர்-துரைமுருகன்
-50 வருடங்களாக கருணாநிதிக்கு உதவியாளராக பணியாற்றும் சண்முகநாதனுக்கு ஸ்டாலின் மரியாதை
-கருணாநிதி வைராவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு
-மேடையின் முன்புறம் கருணாநிதி குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர்
-விழா மேடை அருகே மகிளா காங்கிரஸ் பொதுசெயலாளர் நக்மா அமர்ந்துள்ளார்
-ஸ்டாலின் வீட்டிற்கு ராகுல்காந்தி வருகை
-ஸ்டாலின் வீட்டில் தேநீர் விருந்து
-முதல்முறையாக ஸ்டாலின் வீட்டிற்கு வந்துள்ளார் ராகுல்காந்தி
-திமுக செயல்தலைவர் ஸ்டாலினை சந்திக்க ராகுல்காந்தி வருகை
-ஸ்டாலினை சந்திக்க ஆழ்வார்பேட்டையிலுள்ள வீட்டிற்கு வந்தார் ராகுல்காந்தி
-கருணாநிதி வைர விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி சென்னை வந்தார்
-பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் சென்னை வந்தடைந்தார்
-மா. கம்யூ கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னை வருகை
-இன்னும் சற்று நேரத்தில் கருணாநிதி வைர விழா தொடங்குகிறது
-
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
சபரீசன் கையில் விரைவில் திமுக.. அப்படியே ஆந்திரா ஸ்டைல்.. அணுகுண்டை வீசிய அஇஅதிமுக உதயகுமார் -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை











Click it and Unblock the Notifications