முடிச்சூரில் கருணாநிதி.. வெள்ளம் பாதித்த மக்களைச் சந்தித்தார்.. நிவாரணப் பொருட்களை வழங்கினார்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று தாம்பரம் அருகே உள்ள முடிச்சூருக்குச் சென்று அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதி தனது வயதையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் வெள்ளம் பாதித்த மக்களைச் சந்தித்து வருகிறாரஹ்.

சென்னை சிந்தாதிரிபேட்டை நெடுஞ்செழியன் நகருக்கு நேற்று சென்ற கருணாநிதி அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து சைதாப்பேட்டைக்கு சென்ற அவர் அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதனை தொடர்ந்து கோட்டூர்புரத்திற்கு கருணாநிதி சென்றார்.
பலத்த மழையால் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கும், வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அவர் ஆறுதல் கூறினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் திமுகவினரும் பொதுமக்களும் வழங்கிய நிவாரண பொருட்களை வெள்ளம் பாதித்த மக்களுக்கு கருணாநிதி வழங்கினார்.
இன்று அவர் முடிச்சூருக்குச் சென்றார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே பேசிய கருணாநிதி ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.

கருணாநிதியுடன் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
முன்னதாக திமுக தலைவர் கருணாநிதி வழங்கிய உதவிப் பொருட்கள் அடங்கிய பைகளில் அவரது படமும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் படமும் இடம் பெற்றிருந்தது. இதை பலர் விமர்சித்து சமூக வலைதளங்களில் எழுத ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் அனைத்தும் பெரிய பெரிய அட்டை டப்பாக்களில் வைத்துத் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications