Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குலாம் நபியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை லைவ் செய்த கருணாநிதி பேஸ்புக் பக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், திமுக தலைவர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து பேசிய நிகழ்வை, கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் நேரலையாக ஒளிபரப்பு செய்து அசத்தியது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

A meet with Ghulam Nabi Azad at Gopalapuram.

Posted by Kalaignar Karunanidhi on Friday, February 12, 2016

இந்த சந்திப்பை கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி வீடியோ காட்சி நேரடியாக ஒளிபரப்பானது. அப்போது, பத்திரிகையாளர்கள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொல்லி கேட்டது உள்ளிட்ட பல சப்தங்கள் தெளிவாக கேட்டன.

புகைப்படங்களையும், பேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் அப்டேட்டினார் கருணாநிதியின் பேஸ்புக் அட்மின்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+