காவிரி மருத்துமனையில் குவிந்த கருணாநிதி குடும்பத்தினர்.. தனி மருத்துவரும் வருகை
திமுக தலைவர் கருணாநிதியின் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர்.
தொண்டர்ந்து இரண்டாவது நாளாக திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இரத்த அழுத்தம் கொஞ்சம் குணமாகி உள்ளது.

ஆனால் சிறுநீரக தொற்று இன்னும் குணமாகவில்லை. சரியாக மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர். ஸ்டாலின், மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். மேலும் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர்.
கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். இன்னும் இரண்டு நாட்கள் இதே உடல்நிலை நீடித்தால் அவர் மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்லப்படுவார்.












Click it and Unblock the Notifications