திமுக தலைவர் கருணாநிதி சில தினங்களில் வீடு திரும்புவார் - டாக்டர் ராமதாஸ்
சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல் நயம் குறித்து விசாரித்த பின்னர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். கருணாநிதி இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதி மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் நோய் தொற்று காரணமாக கடந்த 15ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.அவருக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.அவரைக் காண அரசியல் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் நலம் விசாரித்தார். அங்கிருந்த ஸ்டாலின்,கனிமொழியிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ்,திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் தேறி வருகிறார்,இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை ஏற்கனவே,பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் நலம் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications