92 வயதிலும் தினசரி ‘ஸ்டேட்டஸ்’ போடும் கருணாநிதி... பேஸ்புக்கில் ஸ்டாலின், ரஜினிக்கு சவால்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் 2.65 லட்சம் லைக்குகளைப் பெற்றுள்ளது. 92 வயதாகும் கருணாநிதியின் பேஸ்புக் பக்கம், பிற அரசியல் வாதிகளின் பக்கங்களை விட சுறுசுறுப்பாக காணப்படுவது ஆச்சரியமான விஷயம்தான்.
பொழுதுபோக்கு சமாச்சாரமாக கருதப்பட்ட சமூக வலைதளப் பக்கம் மெல்ல மெல்ல கருத்துச் சுதந்திரத்திற்கான களமாகியது. செல்போனில் சமூகவலைதளப் பக்கங்களை பயன் படுத்தும் வசதி வந்த பிறகு மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றதும் இதற்கு ஒரு காரணம்.
மக்களிடம் சமூக வலைதளப் பக்கங்களின் ஆதரவு அதிகரித்ததைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக சமூக வலைதளப் பக்கங்களைப் பயன்படுத்தத் தொடங்கின.
தற்போது பெரும்பான்மையான கட்சிகள் தங்களது முகநூல் பக்கத்தின் வாயிலாக மக்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுகத் தலைவர் கருணாநிதி தனது முகநோல் பக்கத்தில் மற்றவர்களுக்கு சவால் விடும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

பேஸ்புக் பக்கம்...
திமுக தலைவர் கருணாநிதியின் பேஸ்புக் பக்கம் ( Kalaignar Karunanidhi ) என்பது ஆகும். இது நேற்று மதிய நிலவரப்படி 2 லட்சத்து 62 ஆயிரத்து 192 லைக்குகளையும், முகநூலின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரமான வெரிபைட் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.

டுவிட்டர் பக்கத்தில்...
இதேபோல், அவரது டுவிட்டர் பக்கம் 28 ஆயிரத்து 700 பாலோயர்களைக் கொண்டு செயல்படுகிறது.

உடனடி தகவல்கள்...
கட்சியின் அறிக்கைகள், பங்கேற்கும் கூட்டக்கள், பேச்சு, தொண்டர்களுக்கான கடிதம், முக்கிய அறிவிப்பு மற்றும் அரிய புகைப்படங்களும் உடனுக்குடன் இப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

டேப்லெட், ஐபேட், நோட்பேட்...
கருணாநிதியின் பக்கத்தைக் கவனிப்பதற்காக தனி டீமே உள்ளது. கருணாநிதியிடம் இருப்பதால் இவர்களும் சுயமாகவே சுறுசுறுப்புப் புலிகளாக இருக்க வேண்டிய நிலை. மகள் கனிமொழியும், உதவியாளர் நித்யாவும் கருணாநிதியின் பக்கத்தை உயிர்ப்போடு வைத்திருக்க உதவிகரமாக இருக்கிறார்களாம்.

தொழில்நுட்ப உதவி...
அதேபோல், தொழில்நுட்ப ரீதியான அவரது சமூகவலைதள செயல்பாட்டிற்கு நவீன் நரேந்திரன் மற்றும் சுரேஷ் இமானுவேல் என்ற இளைஞர்கள் உதவுகிறார்கள். இவர்கள், அமெரிக்காவில் ஒபாமாவின் சமூக வலைதளத் தேர்தல் பிரச்சாரத்தை வெற்றிகரமாக நடத்திய நிபுணர் சிவா அய்யாபிள்ளை என்ற தமிழரின் எக்கோ மெய்யில் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் எனபது குறிப்பிடத்தக்கது.

முன்னணியில் கருணாநிதி...
தனது தள்ளாத வயதிலும் தினமும் துள்ளலோடு முகநூல் பக்கத்தில் உலவும் கருணாநிதி, திமுக பொருளாளர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், கனிமொழி எம்.பி., பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கார்த்தி ப.சிதம்பரம் உள்ளிட்ட பிரபலங்களைப் பின்னுக்குத் தள்ளி முன்னணியில் உள்ளார்.

ஸ்மார்ட் போனுக்கு மாறிய தொண்டர்கள்...
தொண்டர்களின் பெரும்பாலான கமெண்ட்கள் எடிட் செய்யப்படாமல் அப்படியே போடப்படுவது கருணாநிதி பக்கத்தின் சிறப்பம்சமாகக் கூறப்படுகிறது. நிறையப் பேர் கருணாநிதியை கலாய்ப்பதைக் கூட அவர்கள் நீக்குவதில்லை. கருணாநிதியே வலைதளத்தைப் பயன்படுத்துவதால், அவரது கட்சியினர் பலர் ஸ்மார்ட்போனுக்கு மாறியுள்ளனராம்.

ஜெ. தீர்ப்பு குறித்து மவுனம்...
உலக நிகழ்வுகளில் கருத்தைத் தெரிவிக்கும் கருணாநிதி ஜெயலலிதா மீதான வழக்கின் தீர்ப்பு குறித்து மட்டும் இதுவரை எந்தப் பதிவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி











Click it and Unblock the Notifications