கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன சோனியா: கூட்டணிக்கு புதுக்கணக்கு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து கருணாநிதி கடிதம் அனுப்பியுள்ளார்.
2014ம் ஆண்டு அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இதனையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தி, நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம், கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தாருக்கும், தான் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கூறியுள்ளார். மேலும் கருணாநிதி நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ சோனியாகாந்தி வாழ்த்தியுள்ளார்.
அதேபோல தனக்கும் குடும்பத்தினருக்கும் சோனியாகாந்தி அனுப்பிய புத்தாண்டு வாழ்த்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி தெரிவித்து அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூட்டணி இல்லை
கடந்த வாரம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று தலைவர் கருணாநிதி அறிவித்திருந்தார்.

தமிழக காங்கிரஸ் ரியாக்ஷன்
இந்த அறிவிப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மாநிலத் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

அமைதி காத்த சிதம்பரம், வாசன்
அதேசமயம் மத்திய அமைச்சர்களான பா.சிதம்பரம், வாசன் உள்ளிட்ட தலைவர்கள் அமைதி காத்தனர். கூட்டணியில் இருந்து விலகிய பின்னரும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு கோரியது திமுக. அதேபோல சம்பவம் நாடாளுமன்ற தேர்தலில் நடைபெறலாம் என்றே பேசப்பட்டது.

பாமக – தேமுதிக
திமுக உடன் கூட்டணி இல்லை என்று கூறினாலும் பாமகவை இழுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கியுள்ளது. அன்புமணி, ஸ்டாலின் சந்திப்பும் கவனித்திற்குள்ளாகியுள்ளது. அதேபோல தேமுதிகவிற்கும் பேராயர் எஸ்ரா சற்குணம் மூலம் தூது விடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கணக்கு
இதை கருத்தில் கொண்ட காங்கிரஸ் கட்சித்தலைவி சோனியா புத்தாண்டு வாழ்த்து மூலம் கூட்டணிக்கான புதுக்கணக்கினை தொடங்கியுள்ளார். மோடியை நல்ல மனிதர் என்று கருணாநிதி கூறியதும் கூட காங்கிரஸ் கட்சித் தலைவியை யோசிக்க வைத்திருக்கலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பிறந்தநாள் வாழ்த்து
கடந்த 9ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய சோனியா காந்திக்கு திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாள் வாழ்த்து கூறவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் கூறியிருந்தனர். அதை கருத்தில் கொள்ளாமல் முதலாவதாக புத்தாண்டு வாழ்த்து சொல்லி கூட்டணியை தொடர நினைக்கிறார் சோனியா என்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications