கருணாநிதியின் உடல்நிலை தேறுகிறது... கோடம்பாக்கத்தில் உள்ள மகன் தமிழரசுவின் வீட்டுக்கு வருகை
கருணாநிதி தனது மகன் தமிழரசுவின் வீட்டுக்கு சென்றார்.
சென்னை: உடல்நிலை தேறி வரும் கருணாநிதி கோடம்பாக்கத்தில் உள்ள தனது மகன் தமிழரசுவின் வீட்டுக்கு சென்றார்.
கருணாநிதியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் ஒன்றரை ஆண்டுகளாக கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வு எடுத்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக் கொண்டது.
இதனால் அவர் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்தார். இதன் காரணமாக முரசொலி அலுவலகத்துக்கு சென்று அங்கு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து அவர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார்.

கையசைத்த கருணாநிதி
அங்கு சென்று வருகை பதிவேட்டில் மு.க. என்று கையெழுத்திட்டார். பேரனுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ, பேத்தி பாடிய பாடலை ரசித்த வீடியோ என வெளியானது.

மகிழ்ச்சி
கடந்த 3-ஆம் தேதி அவரது பிறந்த நாள் விழாவின் போது வெளியே அழைத்து வரப்பட்டு தொண்டர்களை பார்த்து கையசைத்தார். இதை பார்த்த தொண்டர்களோ மகிழ்ச்சியில் திளைத்தனர்.

உற்சாகம்
இந்நிலையில் அவருக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் பேசவுள்ளதாகவும் திமுக நிர்வாகிகள் கூறியிருந்தனர். இதனால் தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.

டிரஸ்ட்புரம்
இந்நிலையில் சென்னை கோபாலபுரம் இல்லத்திலிருந்து வாயில் வரை மட்டுமே வந்த கருணாநிதி தற்போது கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள அவரது மகன் தமிழரசுவின் இல்லத்துக்கு சென்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications