தலைவா.. கோபாலபுரத்தில் குவியும் தொண்டர்கள்.. கண்ணீருடன் புலம்பல்

திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பும், காவேரி மருத்துவமனை முன்பும் தொண்டர்கள் கண்ணீருடன் புலம்பி வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதியை பார்க்க மருத்துவமனையில் குவிந்து வரும் தொண்டர்கள்!- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் முன்பும், காவேரி மருத்துவமனை முன்பும் தொண்டர்கள் கண்ணீருடன் புலம்பி வருகிறார்கள்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் பெரிய அளவில் நலிவடைந்து இருக்கிறது. காவேரி மருத்துவமனையில் அவரை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    Karunanidhi health gets Red, DMK cadres crying outside the hospital

    தற்போது வெளியாகி இருக்கும் அறிக்கையில் அவர் உடல்நிலை மோசமாக குன்றி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை இருந்ததை விட அவரது உடல்நிலை இன்றுதான் மிக மோசமான நிலையை அடைந்து இருக்கிறது என்றுள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனை முன் திமுக தொண்டர்கள் கூடி வருகிறார்கள். கண்ணீரில் அவர்கள் சோகமாக காட்சி அளிக்கிறார்கள். அதேபோல் வருத்தத்துடன் கோஷம் எழுப்பி வருகிறார்கள்.

    மருத்துவமனை அறிக்கையை அடுத்து தொண்டர்கள் கண்ணீருடன் இருக்கிறார்கள். தாய்மார்கள், பெண்கள் தலையில் அடித்துக் கொண்டு அழுது வருகிறார்கள்.

    இதனால் அங்கு பெரிய அளவில் பதட்டம் நிலவுகிறது. அதேபோல் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+