For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அனந்தநாயகி கேள்விக்கு கருணாநிதி கொடுத்த "கெளண்டர்"!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியிடம் பேசினால் அவர் கொடுக்கும் "கெளண்டர்" பேச்சுக்களுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது.

குறிப்பாக சட்டசபையில் அவர் செய்த வாதங்களும், ஆளும் கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு அவர் கொடுத்த எதிர் பதில்களும் பிரபலமானவை.

தற்போது கருணாநிதியின் பேஸ்புக்கில் அவரது சில நகைச்சுவை கலந்த பதிலடிப் பேச்சுக்களை அவரே போட்டுள்ளார். வாங்க பார்க்கலாம்....!

பொதுப்பணித்துறை அமைச்சராக

பொதுப்பணித்துறை அமைச்சராக

கருணாநிதி பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அவரது நண்பர் ஒருவருக்கும், கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடல் இது.

என்னங்க இது...

நண்பர்: என்னங்க இது புது மாதிரியான மோதிரமா இருக்கு.

கருணாநிதி: ஆம், மந்திரிச்சி மோதிரம் இது.

நீங்க கூடவா..?

நீங்க கூடவா..?

நண்பர்: என்னது, நீங்க கூடவா மந்திரிச்ச மோதிரம் போட ஆரம்பிச்சுட்டீங்க...

கருணாநிதி: மந்திருச்சு மோதிரத்தை நான் போட்டுக் கொள்ளக் கூடாதா என்ன...

புரியவில்லையே...

நண்பர்: புரியவில்லையே....

தன் மனைவியாரின் மோதிரம் என்பதைத்தான் கருணாநிதி அப்படி வேடிக்கையாக குறிப்பிட்டார். தான் மந்திரி என்றால் மனைவி மந்திரிச்சி தானே...!

அனந்தநாயகி ஜோக்

அனந்தநாயகி ஜோக்

அடுத்து சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் டி.என்.அனந்தநாயகிக்கும், கருணாநிதிக்கும் இடையே நடந்த காமெடி உரையாடல் இது.

கருணாநிதி: நாங்கள் விலைவாசிப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அதுவும் ஒரு நாள் அடையாள மறியல் தான் செய்தோம். அதற்கே எங்களைப் பிடித்து காங்கிரஸ்காரர்கள் மூன்று மாதம் ஜெயிலில் போட்டு விட்டார்கள்.

அனந்தநாயகி: அப்படிப் போட்டதால்தான் நீங்கள் இன்றைக்கு இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள்.

கருணாநிதி: அதனால்தான் நாங்கள் இப்போது அப்படிச் செய்யவில்லை. சிறைக்கு வந்த அன்றைக்கே விடுதலை செய்து விடுகிறோம்.

குமரி அனந்தனுக்கு வந்த கிராஸ் டாக்

குமரி அனந்தனுக்கு வந்த கிராஸ் டாக்

அடுத்து குமரி அனந்தனுக்கும், கருணாநிதிக்கும் இடையே நடந்த உரையாடல் இது. இதுவும் சட்டசபை நிகழ்வுதான்.

குமரி அனந்தன்: நான் தொலைபேசியில் பேசியபோது, டிராக் நம்பர் செவன் என்று குரல் வருகிறது. இப்படிக் குரல் வந்ததுமே எனக்கு அய்யப்பாடு....

கருணாநிதி: குமரி அனந்தனுக்கு அப்படியொரு கர்ண கடூரமான வார்த்தை காதிலே விழுந்திருக்கிறது. சில நேரங்களில் காதல் வசனங்கள் கூட கிராஸ் டாக்கிலே கேட்கலாம். அதையும் முயற்சித்துப் பாருங்கள்.

மீனாட்சி.. காமாட்சி

மீனாட்சி.. காமாட்சி

மீனாட்சி.. காமாட்சி

காமாட்சி: மதுரை மீனாட்சிக்கு வைரக் கிரீடம், வைர அட்டிகை, இன்னும் இருக்கிற பல நகைகளின் மொத்த மதிப்பு எவ்வளவு...

கருணாநிதி: மீனாட்சிக்கு இருக்கிற சொத்தின் மதிப்பைச் சொன்னால் காமாட்சிக்குப் பொறாமை ஏற்படுமே...!

ஒன் சைட் லவ்!

ஒன் சைட் லவ்!

ஜேம்ஸ்: மத்திய மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்து ஆராய அமைக்கப்பட்டு இருக்கும் ராஜமன்னார் குழு ஒன் சைடெட் லவ் போலத்தான் இருக்கிறது.

கருணாநிதி: ஒன்சைடெட் லவ்வின் கஷ்ட நஷ்டங்களை நான் கண்டதில்லை.

English summary
Karunanidhi and his assembly speeches Karunanidhi and his assembly speeches.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X