அப்பா நலமாக உள்ளார்.. பார்த்து பேசிவிட்டுதான் வருகிறேன்.. மு.க அழகிரி தகவல்
திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதாக மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
சிகிச்சைக்குப்பின் உடல்நிலை சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் இருந்த கருணாநிதியின் குடும்பத்தார் புறப்பட்டனர்.

ஸ்டாலின் புறப்பட்டார்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

மருத்துவர் கோபால்
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள், மருத்துவர் கோபால் உள்ளிட்டோரும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.

அழகிரி புறப்பட்டார்
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.

பேசிவிட்டுதான் வருகிறேன்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்பா நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பதால் தான் வீட்டிற்கு செல்கிறேன். அப்பாவை பார்த்து பேசிவிட்டுதான் வருகிறேன் என்றார்.

முன்பை விட நலம்
இதேபோல் திமுக எம்பியான கனிமொழியும் முன்பை விட கருணாநிதி தற்போது நலமாக இருக்கிறார் என்று கூறினார். இருப்பினும் இதனை ஏற்க மறுக்கும் தொண்டர்கள் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தின் முன்பு குவிந்து வருகின்றனர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications