தலைவர் நல்லா இருக்கார்.. ஊருக்கு போங்க ப்ளீஸ்.. திமுக தொண்டர்களுக்கு கனிமொழி வேண்டுகோள்!
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதால் தொண்டர்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 6வது நாளாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று முன்தினம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இதனால் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் கருணாநிதி தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

மருத்துவமனையிலேயே..
கல்லீரல் மற்றும் ரத்த அழுத்த சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், முதுமையை கருத்தில் கொண்டும், கருணாநிதி மருத்துவமனையிலேயே தொடர்ந்து சில நாட்கள் இருக்க வேண்டியிருக்கும் என்றும் காவிரி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

குவிந்த தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர்

கையசைக்க மாட்டாரா?
தங்களின் தலைவர் பூரண குணமடைந்து வெளியில் வரமாட்டாரா தங்களை பார்த்து கையசைக்க மாட்டாரா என திமுக தொண்டர்கள் மருத்துவமனை முன்பு காத்துக்கிடக்கின்றனர்.

உடல்நிலை சீராக உள்ளது
இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அக்கட்சியின் எம்பி கனிமொழி, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என்றார்.

ஊருக்கு செல்லலாம்
கருணாநிதி நலமாக இருப்பதால் வெளியூரில் இருந்து வந்திருக்கும் தொண்டர்கள் ஊருக்குச் செல்லலாம் என்றும் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications