கருணாநிதி நலமாக உள்ளார்.. தொண்டர்கள் யாரும் உயிரை மாய்க்க வேண்டாம்.. ஸ்டாலின் அறிக்கை
திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார், தொண்டர்கள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார், தொண்டர்கள் யாரும் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது முழு சுயநினைவுடன் இருக்கிறார். நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் உடல்நிலை இயல்புநிலையை அடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் அவர் விரைவில் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட வாய்ப்புள்ளது. இந்தநிலையில் தற்போது திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல்நலனுடன் இருக்கிறார் என்றுள்ளார்.
இன்னுயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. "தலைவா வா" என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை. தொண்டர்களின் உணர்ச்சிமிகு முழக்கங்கள் வீண்போகவில்லை!.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலிவுற்ற அதிர்ச்சியால் 21 திமுக தொண்டர்கள் உயிரிழந்தது துயரம் அளிக்கிறது. 21 பேர் உயிரை மாய்த்துக் கொண்டது வேதனையை தருகிறது. திமுக தொண்டர்கள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்
காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தலைவர் கருணாநிதியின் உடல்நல குறைவு சோகமும், தொண்டர்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சோகமும் சேர்ந்து என்னை வாட்டுகிறது.
காவிரி மருத்துவமனை அறிக்கையில் உள்ளது போலவே தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார். திராவிட இயக்கம் தொண்டர்களால் கட்டப்பட்ட கோட்டை. அவர்கள் இல்லையென்றால் இந்த இரும்பு கோட்டையே இல்லை. அவர்கள் உயிரிழப்பு எனக்கு மட்டுமல்ல தலைவருக்கும் வருத்தத்தை உண்டாக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றுள்ளார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications