வயது மூப்பினால் கருணாநிதி பாதிப்பு... பேச்சு பயிற்சி தருகிறோம் - ஸ்டாலின்
கருணாநிதி உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார். அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசை பினாமி அரசு என்று குற்றம் சாட்டினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஓபிஎஸ் கூட புகார் அளித்துள்ளார்.
சசிகலாவின் பினாமி ஆட்சியை எதிர்த்தும் பிப்ரவரி 22ஆம் தேதி திமுக உண்ணாவிரத போராட்டம் தமிழக மாவட்ட தலைநகரங்களில் நடத்தப்படுகிறது. திருச்சியில் நடைப்பெறும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இது நீதிகிடைக்கும் வரை உண்ணாவிரத போராட்டமாக நடைப்பெற உள்ளது என்றார்.

இதனையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விளக்கம் அளித்தார். கருணாநிக்கு வயது மூப்பு காரணமாக சில சங்கடங்கள் உள்ளன. உபாதைகள் உள்ளன. அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்.
அவருக்கு பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. பேசுவதற்கான பயிற்சி எடுத்து வருகிறார். விரைவில் குணமடைவார் என எதிர்பார்க்கிறோம் என்றார். உடல்நலம் பாதிப்பில் இருந்து கருணாநிதி மீண்டு வருகிறார் தற்போது அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications