7 தமிழர் விடுதலை வழக்கு - கருத்து தெரிவிக்க விரும்பவில்லை: கருணாநிதி
சென்னை: ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர் விடுதலைக்கு எதிரான மத்திய அரசின் மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது தொடர்பான தீர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை விவரம்:
கேள்வி: சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அதனை அரசியல் சாசன பெஞ்சுக்குமாற்றி உள்ளதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: இவைகள் எல்லாம் வழக்கு விஷயங்கள். இவைகள் நீதிமன்ற விவகாரங்கள் ஆதலால், இது குறித்து நான் அதிகமாக கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துரைமுருகன் பேட்டி
முன்னதாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியிடம் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய திமுக துணைப் பொதுச்செயலரான துரைமுருகன், இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்க இயலாது என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications