விடுதலையாயிட்டேன் அப்பா... சொன்ன கனிமொழி... முத்தம் கொடுத்து வாழ்த்திய கருணாநிதி
வழக்கில் இருந்து விடுதலையானதாக கூறி தந்தை கருணாநிதியிடம் ஆசி பெற்ற கனிமொழிக்கு முத்தம் கொடுத்து வாழ்த்தினார் கருணாநிதி.
சென்னை: கோபாலபுரத்தில் தந்தை கருணாநிதியிடம் ஆசி பெற்றார் கனிமொழி. விடுதலையாகி விட்டதாக கூறிய கனிமொழியை சிரித்தபடியே முத்தம் கொடுத்து ஆசி வழங்கினார் கருணாநிதி.
2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழி, ஆ.ராசாவிற்கு தொண்டர்கள் பூ மழை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கே வந்து தங்கை கனிமொழியை வரவேற்றார் ஸ்டாலின். தொண்டர்களின் வரவேற்பில் கனிமொழியும், ஆ. ராசாவும் திக்குமுக்காடிப் போயினர்.

களை கட்டிய கோபாலபுரம்
கோபாலபுரத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளதால் திருவிழா கோலம் பூண்டுள்ளது. பூக்கள், தோரணங்கள் என கனிமொழி வசித்து வரும் சிஐடி காலனி வீடும் களைகட்டியுள்ளது. வாழ்த்து கோஷமிட்டு கனிமொழியை வரவேற்றனர்.

கருணாநிதியிடம் ஆசி
வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழியும், ஆ.ராசாவும் தொண்டர்கள் மத்தியில் நீந்தி வந்து கோபாலபுரத்தில் திமுக தலைவர் கனிமொழியிடம் ஆசி பெற்றனர். கோபாலபுரத்தில் அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முத்தமிட்ட கருணாநிதி
வழக்கில் இருந்து விடுதலை பெற்றதை தனது தந்தையின் காதில் கூறி ஆசி பெற்றார் கனிமொழி. அப்போது, நிசமாவா என்று கேட்டு சிரித்தபடியே கனிமொழிக்கு முத்தமிட்டார் கருணாநிதி. கனிமொழிக்கு பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

முத்தமிட்ட ஆ.ராசா
இதனையடுத்து ஆ. ராசாவும் தலைவர் கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார். அப்போது கைகளில் முத்தமிட்டு ஆசி பெற்றார். ஆ.ராசாவிற்கு ஆள் உயர மாலை அணிவித்தனர். அப்போது அருகில் இருந்த துரைமுருகன், கருணாநிதியின் காதருகே சென்று, ராசாவும் விடுதலையாகிட்டார் என்று சத்தம் போட்டு கூறவே சிரித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications