என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே.. இன்னும் சில நாட்களில் மீண்டும் கருணாநிதியின் குரல்!
திமுக தலைவர் கருணாநிதி ஓரிருநாட்களில் பேசக் கூடிய அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புவார் என அவரது மருத்துவர் கோபால் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஓராண்டுக்குப் பின்னர் உடல்நிலை தேறி முரசொலி அலுவலகத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி திரும்பிச் செல்லும்போது புன்சிரிப்புடன் கையை உயர்த்தி காண்பித்தார். அத்துடன் கருணாநிதியின் மருத்துவர் கோபால், ஓரிருநாட்களில் இன்னொரு அதிசயம் நடைபெறும் என கூறியிருக்கிறார். ஆகையால் கருணாநிதி வழக்கமான கரகர குரலில் என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே என பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை தேறிய நிலையில் நேற்று இரவு முரசொலி அலுவலகம் வந்தார். அங்கு சுமார் 40 நிமிடங்கள் முரசொலி பவள விழா கண்காட்சி அரங்கை சுற்றிப் பார்த்தார்.

மகிழ்ச்சியை பகிர்ந்த் கருணாநிதி
பின்னர் புறப்படும்போது முரசொலி மாறன் சிலையை சிறிது நேரம் பார்வையிட்டார். அப்போது காரில் இருந்த படியே புன்சிரிப்புடன் கையை உயர்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கருணாநிதி.

ஓரிரு நாட்களில் அதிசயம்
மேலும் கருணாநிதியின் மருத்துவர் கோபால் கூறுகையில், கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கப் போகிறீர்கள் என்றார்.

பேசப் போகும் கருணாநிதி
கருணாநிதி விரைவில் பேசப் போகிறார்.. வழக்கம் போல என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே.. என கரகர குரலில் பேசுவார் என்பதையே மருத்துவர் கோபால் சூசகமாக குறிப்பிட்டிருக்கிறார்.

இனிப்புகள் வழங்கினர்
கருணாநிதி உடல்நலம் தேறியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications