தொண்டர்களைச் சந்திக்கிறார் கருணாநிதி.. ஜூன் 3ம் தேதி.. உறுதிப்படுத்தியது திமுக!
94வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள திமுக தலைவர் கருணாநிதி, வரும் ஜூன் 3ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7 மாத காலமாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாலும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். வீட்டில் உள்ள முக்கியமான உறுப்பினர்கள் மட்டுமே கருணாநிதியை சந்திக்கின்றனர்.
நோய் தொற்று ஏற்படும் என்பதால் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. கருணாநிதி எப்போது நம்மை சந்திப்பார் என அக்கட்சியின் தொண்டர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவருடைய பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி தொண்டர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாது, இதனால் தொண்டர்கள் பெரும் உற்சாகம் அடைந்து உள்ளனர். கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் பேசுகையில், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அனுமதி அளித்தால் தொண்டர்களை திமுக தலைவர் கருணாநிதி விரைவில் சந்திப்பார் என கூறினார்.
இந்த நிலையில் 94வது பிறந்தநாளன்று ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் தொண்டர்களை கருணாநிதி சந்திப்பார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். விழாவில் பீகார், ஒடிஷா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தொண்டர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications