ஓய்வுக்கே ஓய்வளித்தவர்.. விடை பெற்றுச் சென்றார் ஓய்வறியா உதயசூரியன் கருணாநிதி!
திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.
சென்னை: உலகின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.
வயது மூப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி சென்னையில் காலமானார். 95 வயதான கருணாநிதிக்கு கடந்த 2 வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்காக அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் கருணாநிதி.

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில், 25ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் போனதால், கோபாலபுர இல்லத்திலேயே தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ரத்த அழுத்தம் காரணமாக 27 ம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 11 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி திமுக தலைவர் கருணாநிதி இன்று உயிரிழந்தார்.

தீவிர அரசியல்
திருவாரூர் மாவட்டம் அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேல்- அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாக 1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி என்பதாகும். தன் 14 வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு அதற்கு பிறகு அரசியலில் ஈடுபட்டார்.

குளித்தலை வெற்றி
அதன்பின்னர் தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக தொடங்கினார். படிப்படியாக கட்சியில் தன்னை உயர்த்தி கொண்டார். 1957-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தார். அதற்கென குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன், சட்டமன்றத்தில் காலடி எடுத்து வைத்தார். அன்றுமுதல் சட்டமன்றத்தில் கருணாநிதியுடன் திமுகவும் சேர்ந்தே பயணித்தது.

5 முறை முதல்வர்
1967-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்ந்தார். 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வந்தார். தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்தார். திமுக என்ற கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் பதவியை வகித்துள்ளார். போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவரானார் கருணாநிதி. ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவர் என பாராட்டு பெற்றவரான கருணாநிதியின் உயிர் மண்ணைவிட்டு பிரிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications