'கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊக்கம்...'- பிரதமர் மோடிக்கு கருணாநிதி பாராட்டு!
சென்னை: முதல்வர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, மாநில சுயாட்சி கொள்கையை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மாநிலங்களிடையேயான மன்றத்தின் கூட்டம் சுமார் 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு டெல்லியில் நடந்து முடிந்துள்ளது.

கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகளின் ஒற்றுமை குறித்து வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, "மத்திய-மாநில அரசுகள் உளவுத் தகவல்களைப் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளாமல் உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்திட முடியாது.
இணைந்து செயல்பட்டால் மட்டுமே நாட்டை வளர்ச்சியடையச் செய்ய முடியும் என்றெல்லாம் பேசியிருப்பது, திமுக பல ஆண்டுகாலமாகத் திரும்பத் திரும்பச் சொல்லி வரும் மாநில சுயாட்சிக் கொள்கைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது.
1970-ஆம் ஆண்டுகளில் திமுக எடுத்து வைத்த மாநில சுயாட்சிக் கொள்கைகள், தற்போது தில்லியிலே நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான குழுக் கூட்டத்தில் பிரதமரால் பேசப்பட்டு, பல மாநில முதல்வர்களும் அதே கருத்துகளை எடுத்து வைக்கும் அளவுக்கு, மாறி விட்டது.
இந்த நிலைமைகளைப் பார்க்கும்போது, அண்ணாவின் வழியில் தொடக்கத்திலிருந்து மாநில சுயாட்சி கொள்கைக்காகக் குரல் கொடுத்துவரும் நமக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது," என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications