ஜெயலலிதா ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா? கருணாநிதி கேள்வி
சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னுடைய சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழாவுக்கு மட்டும் நேரடியாகச் செல்லக் காரணம் என்ன? இவர் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் முதல்வரா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:
கேள்வி:- பல்வேறு புதிய தொழில்கள் அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளன என்று ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 193 கோடியே 26 லட்சம் ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 180 கோடியே 41 லட்ச ரூபாய்க்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தும் உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

கருணாநிதி:- பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறும் ஜெயலலிதா, எந்தெந்தத் தொழில்கள் என்ற பட்டியலை தமிழக மக்கள் அறிந்து கொள்வதற்காகத் தருவாரா?
100 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்து நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் 2 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்குக் கையெழுத்திட்டுள்ளதாகச் சொன்னாரே, அதில் எத்தனை இலட்சம் ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்ற சாதனைப்(!) பட்டியலைத் தமிழகத்துக்கு வழங்கிட முன்வருவாரா?
பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் அவசரம் அவசரமாக 193 கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாகச் சொல்லியிருக்கிறாரே, அந்தத் திட்டங்கள் எல்லாம் எப்போது தொடங்கி, எப்போது முடிக்கப்படும் என்று சொல்வாரா? அன்றாடம் பல கோடி ரூபாய்க்கான திட்டங்களை எல்லாம் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்களே, அதற்காக முழுப் பக்க விளம்பரங்களை ஏடுகளுக்குக் கொடுத்தார்களே, உண்மையில் அந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று விட்டனவா?
இன்னும் முடிவுறாமல், பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தொடக்க விழாக்களை நடத்திக் கொண்டார்களா? இல்லை, இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே பணி முடிவுற்ற திட்டங்கள் என்றால், இத்தனை நாட்களாக இந்தத் திட்டங்களையெல்லாம் தொடங்கி வைக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?
மற்ற தொகுதிகளுக்கான திட்டங்களையெல்லாம் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னுடைய சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழாவுக்கு மட்டும் நேரடியாகச் செல்லக் காரணம் என்ன?
இவர் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா? அல்லது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் முதல்வரா? தன்னுடைய தொகுதி, மற்றவர்கள் தொகுதி, ஆளுங்கட்சித் தொகுதி, எதிர்க்கட்சிகளின் தொகுதி என்ற பாகுபாடுகளையெல்லாம் கடந்து நடந்து கொள்ள வேண்டியவர் அல்லவா முதலமைச்சர்? அந்த இலக்கணத்தையெல்லாம் ஜெயலலிதா புறக்கணித்து விட்டாரே? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications