மதுவிலக்கு அறிவிப்பு… கருணாநிதிக்கு ஐடியா வந்தது எப்படி தெரியுமா?
சென்னை: திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
ஏன் இந்த திடீர் அறிவிப்பு? எதற்காக இந்த ஸ்டண்ட் என்று கேட்கின்றனர் பொதுநலவாதிகள். கருணாநிதியின் அறிவிப்புக்கு காரணம் இல்லாமல் இல்லை.
விருதுநகரில் கடந்த 15ம் தேதி காமராஜார் பிறந்தநாளை முன்னிட்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, 2 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற குத்து விளக்கு பூஜை நடந்தது. நாடார் மகாஜன சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விழாவின் முக்கிய அம்சமாக மாறிப்போனது குத்துவிளக்கு பூஜை.
ஆனால் சில தினங்களுக்கு முன்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிமுக மீது குறை சொல்ல முடியாததால் தற்போது மதுக் கடைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவருவது நடைமுறை சாத்தியமில்லை. அருகில் உள்ள மாநிலங்களில் அமல்படுத்தினால் தமிழகத்திலும் மதுவிலக்கை கொண்டுவரலாம் என்று கூறினார்.
இதையெல்லாம் யோசித்து கணக்கு போட்டு பார்த்த கருணாநிதியோ, திடீரென்று யோசித்து, திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அறிக்கை விட்டு ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறார்.
இது சிக்கினால் போதாத ட்விட்டர்வாசிகளுக்கு, சும்மா அடித்து ஆடிவிட்டார்கள். மேற்கொண்டு படியுங்களேன்.
|
யார் கொடுத்த ஐடியா?
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சோ வை சில தினங்களுக்கு முன்னர் கருணாநிதி சந்தித்து பேசினார். ஒருவேளைமதுவிலக்கு ஐடியா, கொடுத்தது...ஒருவேளை சோ"வாக இருக்கலாமோ? என்று கொளுத்திப் போட்டுள்ளார் ஒருவர்.
|
மனைவி மகிழ்ச்சி
மதுவிலக்கு அறிவிப்புக்கு குடிகார கணவரைப் பெற்ற மனைவிமார்கள் மகிழ்வார்கள். தினமும் 200 ரூபாய் சம்பாதித்து, அதில் 150-க்கு குடித்து மீதியை வீட்டுக்கு கொடுக்கும் கணவன் அமையப்பெற்ற மனைவி நிச்சயம் மகிழ்வாள் என்கிறார் ஒருவர்.
|
ஓவர் ரியாக்சன் ஆகாதே
கலைஞரை பத்தி முழுசா தெரிஞ்ச உண்மை திமுகக்காரன் எவனும் இந்த மதுவிலக்கு அறிவிப்புக்கு ஓவர் ரியாக்ட் பண்ண மாட்டான் என்று உண்மையை சொல்லியுள்ளார் ஒருவர்.
|
விஸ்வரூபம் கமல்
தமிழகத்தில் மதுவிலக்கு வந்தால், வேறு மாநிலம் போவோம், அங்கும் வந்தால் வேறு நாடு போவோம் என்று கமல் பாணியில் அறிவித்துள்ளார் ஒருவர்.
|
இது வேறயா?
எப்பா போயஸ் கார்டனுக்கு ஒரு போன் போடுப்பா.. இது வேலைக்கு ஆகாது என்று கேப்டன் விஜயகாந்த் படம் போட்டு சொல்லியுள்ளார் ஒரு வலைஞர்.
|
இதை யார் சொல்வது
மதிமுக, தேமுதிக, பாமக மதுவிலக்குன்னு சொல்றதுக்கும். திமுக, அதிமுக சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
கேப்டன் மீம்ஸ்
ட்விட்டரில் அதிகம் சிக்குவது கேப்டன்தான். டேபிள்மேட் வாங்கினால் கூட கேப்டன் மீம்ஸ் போட்டு வறுப்பார்கள். மதுவிலக்கு வந்தால் கேப்டன் மீம்ஸ் போடுவது எப்படி என்று கேட்டுள்ளனர்.
|
அம்மாவால் சாத்தியமாகாதா?
தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்துள்ளதையும் கலாய்த்துள்ளார் ஒரு ட்விட்டர்வாசி. எப்படியோ இன்றைக்கு ட்விட்டர்வாசிகளிடம் வசமாக சிக்கிவிட்டார் கருணாநிதி. விடுவார்களா? விடிய விடிய ஆடிவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications