For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடை பெற்றார் கருணாநிதி... இனி எப்போது பார்ப்போம்? ... தொண்டர்கள் கதறல்!

கருணாநிதியின் இறுதி ஊர்வலம் எந்த வழியாக பயணிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    முழு அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது- வீடியோ

    சென்னை: கருணாநிதியின் உடல் அண்ணா சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. இவருக்கு மெரினாவில் சமாதி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இன்றைய தினம் ஹைகோர்ட் உத்தரவிட்டது.

    Karunanidhis funeral travels in which route

    இதையடுத்து அங்கு அவரை அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டது.

    பின்னர் சிவானந்தா சாலை வழியாக தந்தை பெரியார் சிலையை கடந்தது. இதையடுத்து பேரறிஞர் அண்ணா சிலையை வந்தடைந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சமாதியை வந்தடைந்தது.

    Karunanidhis funeral travels in which route

    வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் கதறி அழுதனர். அண்ணா சமாதியில் கருணாநிதியின் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது மேல் போர்த்தப்பட்ட மூவர்ணக் கொடி திமுக செயல்தலைவர் ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Karunanidhis funeral travels in which route

    இதையடுத்து சந்தன பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருணாநிதி பல்வேறு தொண்டர்களின் கண்ணீர் துளிகளுக்கு முன்பு நல்லடக்கம் செய்யப்பட்டது.

    English summary
    Karunanidhi's funeral travels through Walaja Road to reach Anna Samadhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X