கருணாநிதி நலம்... புகைப்படம் வெளியிட்டார் ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கும் படங்களை வெளியிட்டார் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
Recommended Video

சென்னை: கருணாநிதி நலமுடன் உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நலமுடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார் ஸ்டாலின்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்தார்.
சென்னை: சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது செயல்தலைவர் முக ஸ்டாலினும் உடனிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கருணாநிதியுடன் சந்திப்பு
கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, க.அன்பழகன், ஆ.ராசா உள்ளிட்டோர் கோபாலபுரம் இல்லம் சென்று சந்தித்தனர்.

ஆற்காடு வீராசாமி
அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆற்காடு வீராசாமி, தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார். வீண் வதந்திகளை பரப்பவோ, நம்பவோ வேண்டாம் என்றார். கருணாநிதி சிரித்து பேசினார் என்று வீராசாமி கூறினார்.

புகைப்படம் வெளியீடு
கருணாநிதி நலமுடன் இருப்பதாக கூறி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டார் ஸ்டாலின். கருணாநிதியுடன் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், வீராசாமி ஆகியோர் உடனிருக்கின்றனர்.

வதந்தி பரப்புவதா?
இதனிடையே கருணாநிதி பற்றி கூறிய ஸ்டாலின், தேவையற்ற வதந்தி பற்றி பரப்பி வருகின்றனர். அமைச்சர்கள் மாறி மாறி பேசுவதை மறைக்கவே வதந்தி பரப்புவதாக கூறினார்.

ஆரோக்கியமாக இருக்கிறார்
கருணாநிதிக்கு நலமுடன் இருப்பதாக துரைமுருகன் கூறினார். இது திருஷ்டி என்றும் தினசரி அவருக்கு ஆயுள் கூடுவதாகவும் துரைமுருகன் தெரிவித்தார். அவர் பேசினாலும், பேசாவிட்டாலும் அவரைப்பற்றியே அனைவரும் பேசி வருவதாக துரைமுருகன் கூறினார்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications