ஆரம்பத்தில் கோட் சூட்.. பிறகு வேட்டி சட்டை.. கூடவே மஞ்சள் துண்டு.. கருணாநிதியின் அடையாளங்கள்
கருணாநிதி வெள்ளை சட்டை மஞ்சள் துண்டிலேயேதான் வாழ்நாளை கழித்தார்.
Recommended Video

சென்னை: அப்போதெல்லாம் கருணாநிதி டிப்-டாப்பாகத்தான் இருந்திருக்கிறார்.
பழைய போட்டோக்களை எல்லாம் பார்த்தால் சுருள்முடியுடன் கோட் சூட், சஃபாரி என்று கருணாநிதி ஜம்மென்று காணப்படுகிறார். ஆனால் நாளடைவில் மெல்ல மெல்ல தன் ஆடை அலங்காரத்தில் வேட்டி, சட்டைக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
பட்டு துணியில் காலர் இல்லாத ஜிப்பா அணிந்தார். அதன்பின்னர் முழுவதுமாக ப்யூர் காட்டனுக்கு மாறிவிட்டார். அதிலும் சட்டையை எடுத்து கொண்டால் எப்போதுமே வெண்ணிற ஆடைதான். வெள்ளை கலர் சட்டை நிரந்தரமானது. ஆனால் கறுப்பு-சிவப்பு கரை வைத்த துண்டுகளும், அவ்வப்போது வண்ண வண்ண சால்வைகளும் அவரது தோளில் வந்து ஒட்டிக் கொண்டு அலங்கரித்துவிட்டு போகும். நீண்ட காலம் வண்ணமய சால்வைகளை தான் கருணாநிதி அணிந்து வந்தார்.

எந்தவித சலனமும் இல்லை
ஆனால் அதெல்லாம் இப்போது நமக்கு நினைப்பிலேயே வருவதில்லை. கருணாநிதி என்றாலே மஞ்சள் துண்டு வந்துதான் கண்முன்னால் நிற்கிறது. எதற்காக இந்த மஞ்சள் துண்டை போட்டுக் கொண்டார் என அவர் இறுதி வரை விளக்கம் அளிக்கவில்லை. அதை பற்றின விமர்சனங்கள் தாறுமாறாக எழுந்தபோதெல்லாம் அதற்கு எந்தவிதமான சலனங்களையும், எதிர்ப்புகளையும் அவர் காட்டவில்லை.

மண்ணுக்குள்ளும் மஞ்சள்துண்டு
அதனை நாத்தீகம் என்றோ, ஆத்திகம் என்றோ எதுவுமே அவர் சொல்லவில்லை. ஆனால் இந்த மஞ்சள் துண்டுதான் மண்ணுக்குள் போகும்வரை அவரது உடலை ஒட்டியே கிடந்தது. ஆரம்ப காலம் தவிர, தன் வாழ்நாளெல்லாம் எளிமையான உடைகளுக்குள்ளே தன்னை புகுத்தி கொண்டார் கருணாநிதி. அவ்வப்போது சில ஸ்பெஷல் ட்ரஸ்ஸில் கருணாநிதி போட்டோக்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் அவைகளும் பரபரப்பாக பேசப்பட்டதே.

லுங்கியில் கருணாநிதி
உதாரணமாக, ஜெயலலிதா கருணாநிதியை விடிகாலையில் கைது செய்யப்படும்போது, அவர் லுங்கியில்தான் இருந்தார். போலீசார் அவரை இழுத்து கொண்டு, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அப்போது சிறை வாசலில் இந்த லுங்கியுடன் தான் 1 மணி நேரம் தரையில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினார். தாம் ஒரு மாபெரும் தலைவர், ஊர், உலகமே பார்க்கிறதே என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லையே?!!

கைதியின் உடை
சிறையிலே அடைக்கப்பட்டதும், கைதியின் உடையையும் அணியவும் செய்தார். அவ்வளவு ஏன், சமீபத்தில் "கோ பேக் மோடி" சம்பவத்தின்போது அனைவரும் கருப்பு கொடி, கருப்பு ஆடை அணிந்து எதிர்ப்பு பதிவு செய்ய வேண்டும் என்று திமுக முடிவெடுத்தது. அப்போது கருணாநிதி கருப்பு சட்டை அணிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்த போட்டோவும் சமூக வலைதளங்களில் வைரலாக வந்தது.

தங்கிவிட்ட மஞ்சள்தான்
இப்படி எப்போதாவது கருணாநிதியின் உடை சற்று மாறினாலும் அதுவும் கவனிக்கப்பட்டுதான் வந்திருக்கிறது. ஆயிரம் இருந்தாலும் மஞ்சள் துண்டு அணிந்த கருணாநிதிதான் நம் மனசுக்குள்ளேயே தங்கிவிட்டார். அதை நம் நினைவுள்ள வரை மறக்க முடியாதே!
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications