"டேப்லட்"டுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியுமா.. கருணாநிதி சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: டாக்டர் கிட்ட போனால் சாப்பிட டேப்லட் தருகிறார்.. சும்மா இருக்கும் நேரத்திலும் நம்மவர்கள் பலருடைய கையிலும் டேப்ல்ட்தான் அலங்கரிக்கிறது.
சரி இந்த டேப்லட்டுக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியுமா.. இதுவரை யாருமே அதுகுறித்த தமிழ் வார்த்தையை எங்குமே எழுதியதாகவோ அல்லது பேசியதாகவோ நினைவில்லை.
ஆனால் திமுக தலைவர் கருணாநிதி அதைத் தமிழ்ப்படுத்தியுள்ளார். தனது பேஸ்புக் பக்கத்திலும் அந்த தமிழ் வார்த்தையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

பனியனும் கையுமாக
கருணாநிதியின் பேஸ் புக் பக்கத்தில் வெள்ளைத் துண்டு, முண்டா பனியன், வேட்டி கட்டிய தோற்றத்தில் இருக்கையில் அமர்ந்து டேப்லெட் பார்ப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.

வரைப்பட்டிகை
அதில் வரைப்பட்டிகை 'டேப்லட்' வாயிலாக சமூக வலைத்தளங்களில் எனக்கு வரும் கருத்துக்களை காணும்போது என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.

டேப்லெட்டுக்கு தமிழ்ப் பெயர்
இதன் மூலம் அறிய வருவது டேப்லெட் என்ற வார்த்தைக்கு கருணாநிதி சூட்டியுள்ள தமிழ்ப் பெயர் வரைப்பட்டிகை.

வாழ்த்தியவர்
நிறையப் பேர் பல காலமாக வாழ்த்துக்கள் என்றே பேசி, எழுதி வந்தனர். இன்னும் கூட பலர் அப்படித்தான் எழுதுகிறார்கள். ஆனால் அதை வாழ்த்துகள் என்று எழுத வைத்தவர் கருணாநிதி.

பல பேர் திருந்தினர்
சீமான் வாழ்த்துக்கள் என்ற பெயரில் ஒரு படம் எடுத்தார். அவரை அழைத்து வாழ்த்துகள் என்று மாற்றித் திருத்தியவர் கருணாநிதி. அதை அவரே சொல்லியுள்ளார்.

வரைப்பட்டிகை பிரபலமாகுமா
பார்க்கலாம், கருணாநிதியின் வரைப்பட்டிகை எந்த அளவுக்குப் பிரபலமாகிறது என்று.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications