Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே ஒரு சிரிப்பு.. அத்தனை திமுகவினரின் உள்ளங்களையும் அள்ளிய கருணாநிதி!

திமுகவின் 15ஆவது அமைப்பு தேர்தலையொட்டி உறுப்பினர் படிவத்தில் சரியாக கையெழுத்திட்டு மீண்டும் தன்னை உறுப்பினராக கருணாநிதி புதுப்பித்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஒரே ஒரு சிரிப்பு.. அத்தனை திமுகவினரின் உள்ளங்களையும் அள்ளிய கருணாநிதி!-வீடியோ

    சென்னை: திராவிட முன்னேற்றக்கழகத்தின் உறுப்பினர் படிவத்தில் கருணாநிதி கையெழுத்து போட்டார். அவர் சரியான இடத்தில் கையெழுத்து போட்டதால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பதிலுக்கு கருணாநிதியும் உற்சாகமாக சிரித்தார்.

    திமுகவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு கட்சியில் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு 15-வது அமைப்பு தேர்தல் நடத்த இருப்பதையொட்டி உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள் கட்சியின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உறுப்பினராக புதுப்பித்து வருகிறார்கள்.

    புதுப்பித்த கருணாநிதி

    புதுப்பித்த கருணாநிதி

    திமுக தலைவர் கருணாநிதியின் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க நேற்று கோபாலபுரம் வீட்டுக்கு செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுடன் சென்றார்.

    விண்ணப்பத்தில் கருணாநிதி கையெழுத்து

    விண்ணப்பத்தில் கருணாநிதி கையெழுத்து

    அங்கு கருணாநிதியிடம், உறுப்பினர் படிவத்தை காண்பித்து கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் தகவலை கூறினார். பழைய உறுப்பினர்கள் தங்களது உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட வேண்டும் என்று படிவத்தை காண்பித்தார்.

    கையெழுத்து போட்டு சிரித்த கருணாநிதி

    கையெழுத்து போட்டு சிரித்த கருணாநிதி

    அப்போது கருணாநிதி மகிழ்ச்சி அடைந்து உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டார். அவர் சரியான இடத்தில் கையெழுத்து போட்டதால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பதிலுக்கு கருணாநிதியும் உற்சாகமாக சிரித்தார்.

    மூத்த தலைவர் கருணாநிதி

    மூத்த தலைவர் கருணாநிதி

    94 வயதாகும் கருணாநிதி மிக அதிக வயதுடைய அரசியல் தலைவர்களில் ஒருவர். வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வரும் அவர் கடந்த பல மாதங்களாகவே அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+