தப்பித்தவறி அதிமுக ஜெயித்தால் 110-வது விதியின் கீழ் தமிழ்நாடு இனி 'அம்மா நாடு'... கருணாநிதி 'பொளேர்'
சென்னை: சட்டசபை தேர்தலில் தப்பித் தவறி அதிமுக ஜெயித்துவிட்டால் 110-வது விதியின் கீழ் தமிழ்நாடு இனி "அம்மா நாடு" என பெயர் மாற்றத்தை ஜெயலலிதா அறிவித்துவிடுவார் என திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.
சென்னையில் கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை:

15வது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 24 மணி நேரமே உள்ளது!
ஆடம்பரம், ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றின் உச்சியிலே அமர்ந்துள்ள ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில் யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை;
"எனது அரசு" - "நான் அறிவிக்கிறேன்" என்று அவர் விடுத்த ஒவ்வொரு அரசு அறிக்கையிலும் தொக்கி நிற்கும் தன் முனைப்புத் தொனியை யாரும் மறக்கவில்லை.
எந்த எதிர்க் கட்சியினரையும் பேரவையில் ஜனநாயக ரீதியாக எதிர்க் கருத்துகளைப் பேசவோ, ஆக்க பூர்வமாக விமர்சிக்கவோ, குரல் எழுப்பவோ அனுமதிக்கவில்லை என்பதை நாடே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
2011ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தவுடன், வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று ஜெயலலிதா தான் கூறினார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவும் இல்லை.
முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் இல்லை. அதுபோலவே அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையோ இந்த ஐந்தாண்டு கால வரலாற்றில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது.
தற்போது தேர்தல் என்றதும், "மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்" என்று கபட வேடம் போடுகிறாரே, அந்த மக்களை எங்கேயாவது, எந்த மாவட்டத்திற்காவது சென்று கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது தான். குறிப்பாக விளக்க வேண்டுமானால், "மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்" என்பதற்கு மாறாக "எனக்காக நான், எனக்காகவே நான்; சசிகலா மற்றும் பரிவாரங்களுக்காக மட்டுமே நான்" என்று சொல்லிக் கொள்ளலாம்.
தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், இதைத் தான் மறுபடியும் அவரே சொல்லிக் கொள்வார். "தமிழ்நாடு" என்ற பெயரை மாற்றி "அம்மா நாடு" என்று 110வது விதியின் கீழ் அறிவித்து விடுவார்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications