தா.பாண்டியனுக்கு என்னைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறது.. கருணாநிதி

இதுதொடர்பாக அவர் அளித்து்ள்ள கேள்வி பதில்
கேள்வி - ஏற்காடு தொகுதியில், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற நீங்கள் சட்ட மன்றம் சென்றீர்களா என்று கேட்டிருக்கிறாரே?
பதில்: சட்டமன்றத்திற்கு நான் சென்றால், என்ன கேள்விகள் எல்லாம் கேட்பேனோ என்பதற்காக, என்னுடைய உடல் நிலை கருதி அதற்கேற்ப இட வசதி செய்து கொடுக்காமல், முன்னாள் முதல்வர் என்பதற்கான தகுதியிலே கூட இடம் ஒதுக்காமல் அலட்சியமாக இருப்பதைப் பற்றி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இதுவரை வாய் திறந்தது உண்டா?
அந்தக் கட்சியைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், சிறந்த தொழிற்சங்கவாதியுமான தோழர் தியாகராஜன் கடந்த வாரம் இறந்து விட்டார். அந்தக் கட்சி எங்களுடைய தோழமைக் கட்சிகூட அல்ல. உடனடியாக நான் இரங்கல் தெரிவித்தேன். எங்கள் கட்சியின் சார்பில் பொருளாளரையும், மற்றவர் களையும் அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கட்சியின் தோழமைக் கட்சியான அதிமுக சார்பில் யாராவது ஒருவர் அந்த இடத்திற்கு நேரில் வந்து இரங்கல் தெரிவித்தார்களா? முதல்வரே மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அதற்காக இரங்கல் தெரிவித்தார்.
ஏன், கடந்த ஆண்டு புதுக்கோட்டையில் அதிமுகவுடன் தோழமை சேர்ந்து வெற்றி பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மறைந்ததால் நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, அங்கே போட்டியிட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கே வாய்ப்பு அளிக்காமல், அதிமுக போட்டியிட்டது.
ஆனாலும் அதையும் பொருட்படுத்தாமல், தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்காத விருந்தாளியைப் போல ஏற்காடு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதுபோலவே மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் எந்த அளவிற்கு அவமானப்படுத்த முடியுமோ, அந்த அளவிற்கு அவமானப்படுத்திவிட்டு, அதன் பிறகு வழங்கினார்கள். இந்த இலட்சணத்தில் தா. பாண்டியனுக்கு என்னைப் பற்றி கேள்வி கேட்க என்ன அடிப்படை இருக்கிறது? என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications