திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது- கருணாநிதி பேச்சு!
சென்னை: திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது அது மேலும் மேலும் வளரும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சட்டசபையில் ஜனநாயகம் படும்பாடு என்ற பெயரில் தி.மு.க பொதுக் கூட்டம் சென்னை தங்க சாலையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் கருணாநிதி பேசியதாவது: நான் வெற்றி, தோல்வி குறித்து கவலைபடுவன் அல்ல. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் வலுவான எதிர்கட்சியாக நாங்கள் செயல்படுவோம்.

வெற்றி, தோல்வியால் தி.மு.க வீழ்ந்து விடாது. பல தேர்தல்களில் தோல்விகளை சந்திந்து இருக்கிறோம். ஆனால், திமுக இன்று வரை வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதை வீழ்த்துவதற்கு பலரும் முயற்சி செய்கிறார்கள்.
யாருடைய அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் ஒருநாளும் அஞ்சாது. தி.மு.க. உடன் பிறப்புக்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய தியாகத்தை செய்து மேலும் இயக்கத்தை வளர்ப்பார்கள்.

சூழ்ச்சி செய்து திமுகவை வீழ்த்த நினைத்தவர்களுக்கு தகுந்த தீர்ப்பு கிடைக்கும். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சரால் எத்தனையோ அநீதிகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆளுங்கட்சி மற்றும் காவல்துறையின் அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் திமுக என்றுமே அஞ்சியது கிடையாது.
திமுகவின் கருத்தை கம்பீரமாக எடுத்து சொல்லும் காலம் விரைவில் வரும். திமுகவின் கருத்துக்களை மக்களிடம் எப்படி எடுத்து கூறுவது என்பது பற்றியும், நம்மை அர்பணித்து கொள்கின்ற வகையில் ஆழமான போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி










Click it and Unblock the Notifications