ஃபேஸ்புக், ட்விட்டரில் கலக்கும் கருணாநிதி, ஸ்டாலின், வைகோ, சரத்குமார்
சென்னை: ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக வலைதளங்களில் திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலக்கி வருகிறார்கள்.
அரசியல் தலைவர்கள் மேடை, மேடையாக சென்று பக்கம் பக்கமாக பேசுவார்கள். ஆனால் தற்போது தொழில்நுட்பம் தெரிந்த தலைவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டரில் இரண்டே வரியில் கருத்து தெரிவித்து மக்களிடம் லைக்ஸ் வாங்கிக் கொள்கிறார்கள். விரும்பிய நேரத்தில் மக்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் பேசுகிறார்கள். மக்களும் அரசியல் தலைவர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுகிறார்கள்.
இந்தியாவில் 100 மில்லியன் வாக்காளர்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் கலக்கும் தமிழக அரசியல் தலைவர்களை பற்றி பார்ப்போம்.

வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கினார். ஆனால் அப்போது அவரை யாருமே சீண்டவில்லை. இதையடுத்து தத்தித் தத்தி ஒரு வழியாக தற்போது அவரது பக்கத்திற்கு 66 ஆயிரம் லைக் பெற்றுள்ளார்.

கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது தான் 90ஐ தொடப் போகிறது. ஆனால் அவரோ ஃபேஸ்புக்கில் உற்சாகமாக செயல்படுகிறார். ஸ்டேட்டஸ் போடுவது அதை அப்டேடட் செய்வது, புகைப்படங்களை அப்லோட் செய்து லைக் வாங்கிக் கொள்வது, இது தவிர ட்விட்டரிலும் அவ்வப்போது கட்சி செய்திகளை சுடச் சுட தெரிவிப்பது என்று மனிதர் இளமை துள்ளலுடன் செயல்படுகிறார். அவரது ஃபேஸ்புக் பக்கத்திற்கு இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் லைக் கொடுத்துள்ளனர். இது தவிர அவரது பெயரில் ஒரு இணையதளமும் வைத்துள்ளார்.

ஸ்டாலின்
அப்பா கருணாநிதி ஒரு பக்கம் ஃபேஸ்புக், ட்விட்டர், இணையதளம் என்று இருந்தால் மறுபக்கம் அவரது மகன் மு.க. ஸ்டாலின் தன் பங்கிற்கு சமூக வலைதளங்களில் துரு, துருவென உள்ளார். அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அப்டேட் போடுவது, அடிக்கடி புகைப்படங்களை போடுவது என்று கலக்கி வருகிறார். இது தவிர அவரது பெயரில் ஒரு இணையதளமும் வைத்துள்ளார்.

திமுக
திமுக அதிகாரப்பூர்வமான இணையதளம் ஒன்றையும் நடத்தி வருகிறது. திமுக நியூஸ்லெட்டரை பெற விரும்புவோர் அதற்கான படிவத்தை நிரப்பி சமர்பிக்க வேண்டும்.

அதிமுக
திமுகவை போன்று அதிமுகவும் ஒரு இணையதளத்தை வைத்து நடத்தி வருகிறது. ஆளுங்கட்சி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அந்த இணையதளத்திற்கு செல்லலாம்.

ஜெ. அன்பழகன்
திமுக எம்.எல்.ஏ.வான ஜெ. அன்பழகனை தொடர்பு கொள்வது மிகவும் எளிது. அவரை ட்விட்டர் அல்லது ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்டு கேள்வி கேட்டாலோ, பாராட்டினாலோ, குறைகள் கூறினாலோ எதுவாக இருந்தாலும் உடனுக்குடன் பதில் அளிப்பார்.

சரத்குமார்
சமக தலைவரும், நடிகருமான சரத்குமார் ட்விட்டரில் உள்ளார். அவரை 96 ஆயிரத்திற்கும் அதிகாமானோர் ட்விட்டரில் பின்தொடர்கிறார்கள். தற்போது அவர் மக்களுடன் விவாதித்து வரும் தலைப்பு மாயமான மலேசிய விமானம் பற்றி.

ஏ.சி. பிரச்சாரம்
தலைவர்கள் ஊராக, ஊராகச் சென்று வெயிலில் வாடி வதங்கி பிரச்சாரம் செய்கின்றனர். இந்நிலையில் சில தலைவர்கள் வீட்டில் ஏசி அறையில் கூலாக அமர்ந்து சமூக வலைதளங்கள் மூலம் சாமர்த்தியமாக வாக்காளர்களை கவர்கிறார்கள். அடடடே!
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications