திருவாரூரில் கருணாநிதி, கொளத்தூரில் ஸ்டாலினுக்கு அமோக வெற்றி வாய்ப்பு - தந்தி டிவி கருத்துக்கணிப்பு
சென்னை: திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியும் கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அமோக வெற்றி வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்துக்கணிப்பு கூறுகின்றது.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 தினங்களே உள்ளன. என்ன அலை வீசுகிறது என்று சரியாக யாராலும் கணிக்க முடியவில்லை. தொலைக்காட்சிகள், நாளிதழ்கள், வார இதழ்களில் கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

சட்டசபை தேர்தலில் வெல்லப்போவது யார் என்பது பற்றி தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் திருவாரூர் தொகுதியில் கருணாநிதியும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுக்கும் அமோக ஆதரவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் திமுகவுக்கு 49 - 55 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதிமுகவுக்கு 34 - 40 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோல் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் திமுகவுக்கு 41 - 47 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதிமுகவுக்கு 35 - 41 சதவீத ஆதரவே காணப்படுகிறது.
திருவாரூர் தொகுதி:
அதிமுக 34 - 40%
திமுக 49 - 55%
இ.கம்யூ 3 - 9 %
பிற கட்சிகள் 4%
நோட்டா 1%
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் : திருவாரூர் தொகுதியில் #Karunanidhi-க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? pic.twitter.com/t2WhjhAC7l
— thanthitv (@thanthitv) May 13, 2016
கொளத்தூர் தொகுதி:
அதிமுக 35 - 41%
திமுக 41 - 47%
தேமுதிக 7 - 13 %
பாஜக 5 %
பிற கட்சிகள் 2%
நோட்டா 1%
#ThanthiTV-ன் பிரமாண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள்:#Kolathur-ல் #MKStalin-க்கு வெற்றி வாய்ப்பு எப்படி?#TNPolls2016 pic.twitter.com/HFsQCX6aEA
— thanthitv (@thanthitv) May 13, 2016
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications