அடையாறு, கூவத்தில் செய்யாத பணிக்கு பொய்யாக நிதி ஒதுக்கீடா?: நீதி விசாரணைக்கு கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: அடையாறு, கூவம், கொசஸ்தலையாறுகளை தூர்வாரும் பணியே செய்யாமல் நிதி ஒதுக்கப்பட்டது தொடர்பாக நீதி விசாரணை நடத்தி உண்மையை வெளியிட அதிமுக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமூக நீதி தத்துவத்துக்கு எதிரான ‘கிரீமி லேயர்' முறையை நீக்க வேண்டும். தேர்வாகியுள்ள பிற்படுத்தப்பட்டோரின் நலன்காக்க, இதர பிற்படுத்தப்பட்டோரை உரிய பதவிகளில் பொருத்தமான தகுதி நிலைகளில் பணியநியமனம் செய்ய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என பிரதமரை கேட்டிருந்தேன்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக தீர்க்காவிட்டால், இட ஒதுக்கீட்டில் நம்பிக்கை உள்ளோர் போராட தொடங்கிவிடுவர் என எச்சரித்துள்ளது. பிரச்சினையின் முக்கியத்துவத்தை உணர்ந்து ‘கிரீமிலேயர்' பிரச்சினைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
நத்தம் விஸ்வநாதன் மின்துறை அமைச்சராக இருந்த போது மின்வாரியத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.சீனிவசஸ் என்பவரால் தொடரப்பட்ட வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில், குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. எனவே வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என கூறியுள்ளது.
இதை பார்க்கும் போது வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை ஆர்வம் காட்டவில்லை என்பது தெளிவாகிறது. இதனால், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற உயர் நீதிமன்றத்தில் சீனிவாஸ் கோரியுள்ளார். இதற்கு பதிலளிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலாளர், சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி சுப்பையா உத்தரவிட்டுள்ளார்.
திமுகவினரை பழிவாங்கும் நோக்கில் தற்போது பொன்முடி, சுரேஷ்ராஜன் போன்றவர்கள் நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட போதும் ‘அப்பீல்' செய்கின்றனர். சட்டப்படி இது வேறுபாடான, முரண்பாடான அணுகுமுறையாகும்.
தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளுக்காக ரூ.17 ஆயிரத்து 432 கோடி நிதியுதவியை மத்திய அரசிடம் இருந்து தமிழகம் எதிர்பார்க்கிறது. ஆனால், மாநில அரசு சார்பில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 640 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்படி நிவாரணப்பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியும். மொத்தத்தில் 15 சதவீத அளவுக்கு கூட வெள்ள நிவாரணப் பணிகள் முழுமை பெறவில்லை என்பது தான் உண்மை. நிவாரண உதவிகள் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழு முன்னிலையில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அதிமுக அரசு ஏற்கவில்லை.
சென்னை வெள்ள பாதிப்புக்கு காரணம் அடையாறு, கூவம், கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய்களை முறையாக தூர்வாராததும், ரூ.154 கோடி ஒதுக்கி செலவழிக்கப்படாததும் தான் என தற்போது தெரியவந்துள்ளது. இப்பணிகளுக்காக பொன்னேரி, மதுரை, திருச்சி மற்றும் ஆந்திர ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் முதல் கட்ட பணிகளை கூட தொடங்காத நிலையில், ஆனால், நிறுவனங்கள் அப்பணிகளை மேற்கொண்டு வருவதாக கணக்கு காட்டி, பில் தொகையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
வெள்ளம் வருவதற்கு முன்னரே, பணிகளை முடித்திருந்தால் இந்த வெள்ள பாதிப்பின் சோகம் ஏற்பட்டிருக்காது என வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த ஊழல் பற்றி, உயர் நீதிமன்றத்தில் பொறுப்பில் இருக்கும் ஒரு நீதிபதி தலைமையில், நீதி விசாரணை நடத்தி, உண்மை விவரங்களை நாட்டிற்குத் தெரிவிக்க அ.தி.மு.க. அரசு முன்வர வேண்டும். மடியில் கனம் இல்லை என்றால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் நீதி விசாரணைக்கு மனப்பூர்வமாக அதிமுக அரசு முன்வரவேண்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications