அதிமுக ஆட்சியில் அறிவித்த எந்த மின் திட்டமும் 5 ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை: கருணாநிதி
சென்னை: அதிமுக ஆட்சியில் அறிவித்த எந்த மின் திட்டமும் 5 ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் மூலமாகவே மின் உற்பத்தியில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சர் ஜெயலலிதாவும், மின் துறை அமைச்சரும் தங்கள் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி விட்டதாக பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தியதன் மூலமாக 4,455.50 மெகாவாட் உற்பத்தித் திறன் கிடைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில் புதிய திட்டங்களைச் செயல்படுத் தியதன் மூலமாக 4,455.50 மெகாவாட் மின் உற்பத்தி தமிழகத்திற்குக் கிடைத்திருக்கிறதா? அப்படி கிடைத்திருந்தால் எந்தெந்த மின் திட்டங்கள் மூலம் எத்தனை மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்தது? அந்த மின் உற்பத்தித் திட்டங்கள் எந்த ஆட்சிக் காலத்திலே எப்போது தொடங்கப் பட்டன? உண்மையில் அவை அ.தி.மு.க.வின் கடந்த ஐந்தாண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டமா? என்பதை ஆதாரப்பூர்வமாக முதல்வரோ துறையின் அமைச்சரோ வெளிப்படையாகச் சொல்லத் தயாரா?
கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் (2011-2016) தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து ஒரு யூனிட் கூட மின்சாரம் கிடைக்கவில்லை. 5 ஆண்டுகளில் அறிவித்த எந்த மின் திட்டமும் தொடங்கப்படவில்லை. ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்து வெறும் 27 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. எஞ்சிய 4,428 மெகாவாட் மின்சாரம், தி.மு. கழக ஆட்சியிலே தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்தும், மத்திய அரசு திட்டங்களிலிருந்தும்தான் கிடைத்துள்ளது என்று கருணாநிதி கூறியுள்ளார்.
-
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள்.. ஒன்றில் மட்டுமே தனி சின்னம்! தொகுதி பங்கீடு கையெழுத்து -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்












Click it and Unblock the Notifications