கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம்.. காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் மகிழ்ச்சி

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தற்போது தொண்டர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். காவேரி மருத்துவமனை அறிக்கையில் கருணாநிதி உடல்நிலை சரியாகி இருப்பதாக கூறப்பட்டு இருப்பதால், தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் இன்று மாலை வெளியாகி உள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்த பிரச்சனை மற்றும் சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது. அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முதல் இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகம் ஆனது

கருணாநிதி உடல்நிலை சரியாக இருக்கிறது என்றவுடன் , இன்று மாலை மருத்துவமனைக்கு வெளியே கூட்டம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கூட்டம் அதிகமாகி இருக்கிறது.

மழை பெய்கிறது

மழை பெய்கிறது

அங்கே மிகவும் மிதமான அளவில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதற்கு இடையிலும் மக்கள் அங்கே கூடி வருகிறார்கள்.

போலீஸ்

இந்தநிலையில் அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையும் அங்கே கூடி இருக்கிறது.

எல்லாத்தலைவர்களும் வருகை

எல்லாத்தலைவர்களும் வருகை

இந்த நிலையில் தற்போது காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் வருகை புரிந்துள்ளனர். ஸ்டாலின், மு.க.அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். மேலும் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர்.

தொண்டர்கள் வெளியேற்றம்

தொண்டர்கள் வெளியேற்றம்

இந்த நிலையில் அந்த பகுதியில் இருக்கும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.அதேபோல் மருத்துவமனை இருக்கும் ஆழ்வார்பேட்டை பகுதியில் இருந்து தொண்டர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். பாதுகாப்பு கருதி அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். மேலும் மருத்துவமனைக்கு உள்ளே இருக்கும் கருணாநிதி குடும்பம் சாராத நபர்களும் வெளியேற்றப்படுகிறார்கள்.

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்

மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்

இந்தநிலையில் சில நிமிடம் முன், காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியானது . அதில் கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது . அவர் உடல்நிலையில் சில நிமிடம் முன் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது உடல்நிலை சரியாகி உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் தற்போது கருணாநிதியின் உடல் உறுப்புகள் மீண்டும் சீராகி வருகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+