ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்... கருணாநிதி, ஸ்டாலினின் யோகா பயிற்சி
சென்னை: சர்வதேச யோகா தினத்தை உலகம் முழுவதும் உற்சாகமாக யோகா பயிற்சி செய்து கொண்டாடியுள்ளனர். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி முதல் சாமான்ய மக்கள் வரை நேற்றைய தினம் யோகா பயிற்சி செய்தனர். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், தொண்டர்களும் பள்ளி மாணவர்களும் யோகா பயிற்சி செய்து யோகா தினத்தை கொண்டாடினர்.
திமுக தலைவர் கருணாநிதி தான் மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி பற்றியும், யோகா, மூச்சுப்பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யோகா செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் யோகாதினத்தைப் பற்றியும், பல ஆண்டுகளாக தான் மேற்கொண்டு வரும் யோகா பயிற்சி பற்றியும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஸ்டாலின் தனது பதிவில், ஜூன் 21ம் தேதியை "சர்வதேச யோகா தினமாக" கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் 177 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது மனித குலத்தின் சிறந்த உடல்நலத்திற்கு வழி அமைத்துக் கொடுத்து, ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பணியில் முக்கிய வெற்றியாகவே கருத வேண்டும்.
மக்களுக்கு பொதுச் சுகாதார சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பது அரசு நிர்வாகத்தின் முக்கிய அம்சம். ஆகவே, ஆரோக்கியமான மன நிலைக்கும், உற்சாகமான உடல் நலத்திற்கும் நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டும். அதற்கு யோகா கலை மிகவும் உதவிகரமாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யோகா கலை இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்தாலும், இன்றைய தினம் உலக நாடுகளே யோகாவை ஏற்றுக் கொண்டு அந்த பயிற்சியில் ஈடுபடுகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
நான் பல வருடங்களாக யோகா பயிற்சி செய்து வருகிறேன். மனதிற்கு சமநிலை, சுறுசுறுப்பு, உடலுக்கு ஆரோக்கியம் போன்றவற்றை மனிதனுக்கு அளிக்கும் நேர்த்தியான பயிற்சி யோகா என்றே நான் நம்புகிறேன். பொது சுகாதாரம், உடல் நலம் போன்றவை மனிதகுலத்திற்கு இன்றியமையாதது என்பதில் மனதில் கொண்டு யோகா பயிற்சியை நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக கடைப்பிடிக்க ஜூன் 21-ஆம் தேதியான இன்று உறுதியேற்போம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications