ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா இல்லையா.. கருணாநிதி முடிவெடுப்பார்.. மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவளிப்பதா வேண்டாமா என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி முடிவெடுப்பார் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓபிஎஸ் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக நிர்வாகிகள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தமிழக முதல்வர் ஓபிஎஸ் ஆதரவு கோரினால் அளிக்கப்படும் என்று திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாக செய்தி வெளியானது. இதனை உடனடியாக மறுத்தார் அக்கட்சியின் செயல்தலைவரான மு.க. ஸ்டாலின்.

மேலும், சுப்புலட்சுமி ஜெகதீசனின் கருத்தில் உடன்பாடு இல்லை என்றும், தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருவதால் அது குறித்து திமுக ஆலோசனை செய்து முடிவு செய்யும் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது குறித்து அக்கட்சி தலைவர் கருணாநிதியும், பொதுச் செயலாளர் அன்பழகனும் முடிவு செய்வார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த பிரச்சனை குறித்து திமுக நிர்வாகிகள் யாரும் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications