திருவள்ளுவர் சிலை... உத்தர்கண்ட் முதல்வருக்கு கருணாநிதி நன்றி
சென்னை: திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுத்து வரும் உத்தரகண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி நன்றி கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை வைக்க வரவேற்பு இல்லை என்று செய்திகள் வந்தன.

இதற்கு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் தருண் விஜய் திருவள்ளுவர் சிலை அப்புறப்படுத்தப்படவில்லை. வேறு இடத்தில் விரைவில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மக்களின் உணர்வுகளை உத்தரகண்ட் அரசு மதிக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில், உத்தரகண்ட் மாநில காங்கிரஸ் முதல்வர் ஹரீஷ் ராவத் அடுத்த சில நாள்களில் திருவள்ளுவருக்கு கெளரவம் அளிக்கும் வகையில் அவரது சிலையை நிறுவிட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார். இது, ஏற்பட்ட மனக் காயத்துக்கு மருந்து தடவுவதாக அமைந்துள்ளது. அதற்காக தமிழ் உணர்வு படைத்த மக்களின் சார்பில் உத்தரகண்ட் முதல்வருக்கு நன்றி.
எனவே, தமிழர்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்து விட்ட இந்தப் பிரச்னை குறித்து உடனடியாக மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, திருவள்ளுவர் சிலையை உரிய இடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications