விளிம்பு நிலை மக்கள் என்றென்றும் வணங்க வேண்டிய நாயகன்.. சமூக நீதிக்காவலன் கருணாநிதி!
-ராஜாளி
சென்னை: ஆதிக்க சக்திகளும், ஆண்ட பரம்பரைகளும் தங்களுக்கு சேவகம் செய்யவும் தாங்கள் அதிகாரம் செய்யவும் ஒரு கூட்டம் எப்போதும் தேவை என்ற கருத்தியலோடு இயங்கிய கால கட்டம் அது. பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கு சேவை செய்யவும் மனிதர்கள் செய்யக் கூடாத, அருவெறுக்கும் வேலைகளை செய்யவும் ஒரு அடிமைக் கூட்டம் எப்போதும் இருக்கவேண்டும் என்று எண்ணிய அவர்கள் தாங்கள் அனுபவித்து வரும் எந்த வசதிகளும் வாய்ப்புகளும் விளிம்பு நிலையில் இருந்த அந்த மக்களுக்கு சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள். அதற்கு ஆன்மீகத்தையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்கள்.

இந்த தருணத்தில்தான் நீதிக்கட்சி வகுப்பு வாத பிரதிநித்துவம் வழங்கவேண்டும் என்பதில் திண்ணமாக இருந்தது. ஆனால் நடைமுறையில் அதனை நீதிக்கட்சியால் உடனடியாக செயல்படுத்த இயலவில்லை. காமராஜரின் காலத்தில் 25% ஆக இருந்த இட ஒதுக்கீடு கருணாநிதி காலத்தில் 35% ஆக மாற்றப்படுகிறது. தி.மு.கவின் முக்கிய கொள்கைகளில் முக்கியமானதாக சமூக நீதியை கருதிய கருணாநிதி, அதற்காகத் தான் ஆட்சியிலிருந்த போதெல்லாம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு, முதன் முதலில் 1969இல் முதலமைச்சரானவுடன், 'சட்டநாதன் ஆணைக்குழுவை' அமைத்தார்.
ஆனால் எம் ஜி ஆரின் ஆட்சிக் காலத்தில் இந்த இட ஒதுக்கீடு பொருளாதாரத்தின் அடிப்படையில் உருமாற்றம் பெறுகிறது. தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தாலும் அவர்கள் 9 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்கிறார் எம் ஜி ஆர். தி.க, தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த முறையை எதிர்த்து போராடுகிறார்கள். இதன் விளைவாக அதிமுக அரசு இந்த முறையை கைவிட்டு மீண்டும் இட ஒதுக்கீட்டு முறையை கொண்டு வந்ததுடன் போராட்டத்தில் கேட்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஏற்றார்போல இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக மாற்றுகிறது. இந்நிலையில் மீண்டும் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தாழ்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டோடு மலை சாதியினருக்கு ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து மொத்த இட ஒதுக்கீட்டின் அளவை 69% ஆக மாற்றுகிறார்.
இதற்கு நீதிமன்றம் வகையில் பிரச்சனை வருகிறது கிரீமிலேயர் படி மொத்த இட ஒதுக்கீடே 50 விழுக்காட்டிற்கு மேல் செல்லக்கூடாது என்று நீதிமன்றம் கூற இதற்கு எப்படி தீர்வு காணலாம் என்று யோசித்த மாநில அரசு இந்த இட ஒதுக்கீட்டு முறையை 31C என்ற வரையறைக்குள் கொண்டு வந்து அதை 9 து பட்டியலுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. இதனால் நீதிமன்றங்களிலும் இது குறித்து வழக்கு தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. 50% பிற்படுத்தப்பட்டோர், 18% தாழ்த்தப்பட்டோர், 1% மலை சாதியினர் மீதமுள்ள 31% பொதுப்பிரிவினர் என்றிருந்த நிலையில் சட்டநாதன் ஆணையத்தை நியமிக்கிறார் கருணாநிதி. இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. விளைவாக பிற்படுத்தப்பட்டோருக்கான 50 விழுக்காட்டில் 20% மிகவும் பிற்படுத்த்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடாக மாற்றப்படுகிறது. மீதமுள்ள 30 விழுக்காட்டில் 3.5% இஸ்லாமியர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடான 18 விழுக்காட்டில் 3% அருந்ததியருக்காக ஒதுக்கப்படுகிறது. இப்படியாக இட ஒதுக்கீடு மூலம் ஆதிக்க சாதியினருக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் இணையாக அல்லது போட்டியிடக் கூட அளவில் விளிம்பு நிலை மக்களுக்கு போதுமான பலத்தை வழங்குகிறார் கருணாநிதி. அதனால்தானோ என்னவோ ஆதிக்க சக்திகளுக்கும் வலதுசாரி இயக்கங்களுக்கும் இன்றளவும் கருணாநிதி வேண்டாதவராகவே தெரிகிறார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் இல்லாதபோதும் மத்திய அரசாங்கத்தின் அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த அவர், பிரதமராக வி.பி.சிங் இருந்த போது, 'மண்டல் ஆணைக்குழு அறிக்கை' அமுல்படுத்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். தமிழ்நாட்டில் எழுப்பிய சமூக நீதிக் குரல், இந்திய அளவில் கேட்டது, மண்டல் ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்பட்ட போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டு முறையை விளிம்புநிலை சாதியினருக்கு மட்டுமல்லாது மகளிருக்கும் அளித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு. உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீட்டை அளித்தார் கருணாநிதி. 1996-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முக்கியமான அம்சமாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்களில் முதல் முறையாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது.
மொத்தம் 474 மாநகராட்சி வார்டுகளில் பெண்களுக்கு 161 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 35 என்றும் - மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிகள் மொத்தம் 28இல் பெண்களுக்கு 10 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 4 என்றும் - மாவட்டப் பஞ்சாயத்து வார்டுகள் பதவிகள் மொத்தம் 649இல் பெண்களுக்கு 242 என்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 97 என்றும் - நகராட்சித் தலைவர்கள் பதவிகள் மொத்தம் 106 ல் பெண்களுக்கு 35 என்றும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 6 என்றும் ஒவ்வொரு பதவியிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் என்ற அளவிற்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டன.
இப்படி ஒவ்வொரு படிநிலையாக சமூக நீதியை நிலைநாட்டிய கருணாநிதி சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதிலும் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். ஆதிக்க சாதியினரை சேர்ந்தவர்களும், விளிம்புநிலை சாதியினரும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக தமிழகமெங்கும் சமத்துவபுரங்களை நிறுவினார். பெரியார் சமத்துவபுரங்கள் என்ற பெயரில் நிறுவப்பட்ட அந்த அந்த சமத்துவபுரங்கள் அனைத்தும் சமூக நீதிக்கு என்றென்றும் சாட்சியமாக விளங்க கூடியவை.
ஆலயங்களில் ஆண்டவன் முன்பு அனைவரும் ஒன்றே என்ற நிலை வரவேண்டும் என்று கருதிய அவர் தமிழகத்தில் பரிவட்டம் கட்டும் முறையை ஒழித்தார். அதோடு அனைத்துப் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகர திட்டத்தை கொண்டு வந்து சமூக நீதியும் சமத்துவமும் இம்மண்ணில் தளைத்தோங்க அச்சாணியாக இருந்தார்.
இந்தியாவில் சமூக நீதியை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமேயானால், அதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது முக்கியமானது என தனது இறுதிமூச்சு உள்ளவரை போராடியவர் திமுக தலைவர் கருணாநிதி. மனித சமுதாயத்தில் சமூக நீதியும் சமத்துவமும் நிலைத்திருக்கும் வரையில் கருணாநிதியின் பெயரும் நிலைத்திருக்கும்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications