கருணாநிதி நல்லடக்கம்: தீர்ப்பு சாதகமாக வரும்.. திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் நம்பிக்கை
மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு எதிராக பெரிய ஆதாரம் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
Recommended Video

சென்னை: மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்வதற்கு எதிராக பெரிய ஆதாரம் எதையும் தமிழக அரசு வெளியிடவில்லை, தீர்ப்பு திமுகவிற்கு சாதகமாகவே வரும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. மெரினா கடற்கரையில் உள்ள, அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதி அளிக்க முடியாது என்று அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து திமுக அவசர வழக்கு தொடுத்தது. இந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் முன்பு விசாரிக்கப்பட்டது. தமிழக அரசுத் தரப்பில் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜரானார். மறுபக்கம் திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர். இளங்கோ, கண்ணதாசன், ஆர். எஸ் பாரதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.
தற்போது வழக்கு விசாரணை காலை 8 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திமுக தரப்பு வழக்கறிஞர் கண்ணதாசன் பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில், அரசு ஸ்டாலினிடம் சட்ட சிக்கல் இருப்பதாக கூறினார். ஆனால் அனுமதி அளிப்பதில் என்ன சட்ட சிக்கல் என்று நீதிபதிகளிடம் அரசு கூறவில்லை. ஆனால் ஏன் அனுமதி அளிக்க கூடாது என்று சில காரணங்களை தெரிவித்தார்கள்.
திமுக தரப்பில் தலைவர் கருணாநிதி குறித்து எடுத்துரைத்தோம். 5 முறை முதல்வராக இருந்தவரை இப்படி அவமதிக்க கூடாது என்று கூறினோம். இந்த வழக்கில் பதில் மனு தேவையில்லை. ஆனாலும் அரசு தரப்பிற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது என்று நீதிபதிகள் கூறினார். காலை இதுகுறித்து விசாரிக்கப்படும். காலை தீர்ப்பு வழங்குவதாக கூறியுள்ளனர். கண்டிப்பாக தீர்ப்பு சாதகமாக வரும் என்று நம்புகிறோம்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications