ஒரு மாதமாகவே வெளியுலகுக்கு வராமல் இருந்த கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி ஒவ்வாமை பாதிப்புக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கடந்த ஒரு மாதமாகவே அவர் ஓய்வில் இருந்து வந்தார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஒரு மாதமாகவே வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்த நிலையில்தான் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவரை சேர்த்துள்ளனர்.
92 வயதான திமுக தலைவர் கருணாநிதி கட்சி அலுவலகமான அறிவாலயத்திற்கு வராமல் இருக்க மாட்டார். உடம்புக்கு சரியில்லாவிட்டாலும் கூட சிறிது நேரமாவது வந்து விட்டுப் போவார். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

வீட்டிலேயே இருந்து வந்தார். அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதாகவும், வீட்டிலேயே சிகிச்சை நடப்பதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்தும் வீட்டிலேயே இருந்து வந்தார் கருணாநிதி.
நவம்பர் 24ம் தேதி கருணாநிதியை, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் கோபாலபுரம் இல்லதிதற்குப் போய்ப் பார்த்து நலம் விசாரித்த புகைப்படம் வெளியானது. உடல் நிலை பாதிக்கப்பட்ட பின்னர் வெளியான முதல் படம் அது. வழக்கமான உற்சாகத்துடன் அப்படத்தில் கருணாநிதி இல்லை. மிகவும் பலவீனமான நிலையில் காணப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி.
பிற கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கருணாநிதியைப் பார்க்க விரும்பினாலும் கூட அவரைப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் திமுக தலைவர் இன்று அதிகாலை மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றுதான் கருணாநிதியைப் பார்க்க அவரது 2வது மகன் மு.க.அழகிரி கோபாலபுரம் வந்திருந்தார். வந்த இடத்தில் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்தார். இதனால் கட்சியில் மீண்டும் அழகிரி இணையலாம் என்ற பேச்சுக்கள் வலுத்தன. இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுகவினரை கவலை கொள்ள வைத்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications