வேலூர் இப்ராஹிம் வந்துட்டாரே.. உடனே பாஜக நாராயணன்.. "கருணாநிதி்யை சொல்லியிருந்தா, புரிஞ்சிருக்குமோ?"
சென்னை: தமிழ்க்கடவுள் முருக பெருமானை தமிழக அமைச்சர் பன்னீர்செல்வம் இழிவுப்படுத்திய சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது... இந்த விவகாரத்தில் தமிழக பாஜகவும் தலையிட்டு, திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறது.
கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கு மற்றும் எதிர்காலம் சார்ந்த சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று விழாவினை துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியது சர்ச்சையாகிவிட்டது.

சர்க்கரை வியாதி:
"முருகன் சர்க்கரை வியாதி வரக்கூடாது என்பதற்காக திணையை சாப்பிட்டார்... அவர் 2 கல்யாணம் செய்து கொண்டார். இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி 2 திருமணம் தான்... அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக முருகன் தினை மாவு சாப்பிட்டார்" என்றார் அமைச்சர்.
அமைச்சரின் இந்த பேச்சு, கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.. பிறகு, "நான் கிண்டலாக ஜோவியலாக பேசினேன்" என்று அமைச்சர் விளக்கம் கூறியிருந்தார்.. எனினும், இந்த விஷயத்தில், பாஜக தலையிட்டுள்ளது.. "இதுவே, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே?" என்று நாராயணன் திருப்பதி காட்டமாக கேட்டிருந்தார்..
"கடவுள் முருகர் குறித்து அமைச்சர் பன்னீர் செல்வம் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முருகன் இரண்டா அல்லது மூன்றா? ஆமாம் சாமி... இரண்டு திருமணம் தான். அந்த காலத்திலேயே ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தினை மாவு சாப்பிட்டார் " என்று கூறி விட்டு "ஏதோ சாதாரணமாக கிண்டலாக, ஜோவியலாக பேசுகிறேன்" என்றும் கூறியுள்ளார்.
கருணாநிதி:
உவமான, உவமேயங்களுக்கு ஆன்மீக எதிர்ப்பாளர்கள் ஏன் கடவுள்களை குறிப்பிட வேண்டும்? ஏன் கடந்த காலத்தை குறிப்பிட வேண்டும்? நிகழ் காலத்தில் இல்லாத சான்றுகளா? திராவிட மாடலில் இல்லாத ஒப்பீடுகளா? சாதாரணமாக, கிண்டலாக, ஜோவியலாக உங்கள் தலைவர் கருணாநிதி அவர்களையே குறிப்பிட்டிருந்தால் அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்குமே? தினை மாவை எங்கே வாங்கினார் என்பதையும் சேர்த்து சொல்லுங்களேன்! என நாராயணன் திருப்பதி ஆவேசமாக பேசிய பேச்சுக்கள் பரபரப்பை கிளப்பி வருகின்றன.
இந்நிலையில், பாஜகவின் வேலூர் இப்ராஹிமும் இதே பிரச்சனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார்..
பகிரங்க மன்னிப்பு:
அப்போது, "ஜுன் 6ம் தேதி பாஜக சிறுபான்மை பிரிவு சார்பில் மதநல்லிணக்க அமைதி நடைபயணம் மேற்கொள்ள போகிறோம்.. முருக கடவுளை திமுக அமைச்சர் பன்னீர்செல்வம் அவமதித்து பேசியிருக்கிறார்.. சுயநினைவோடு உள்ளவர்கள் இப்படி பேச மாட்டார்கள்.. தான் சார்ந்த சமயத்தையே கொச்சைப்படுத்தி பேசிருக்கிறார் பன்னீர்செல்வம். அவர் இதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்..
திமுக ஆட்சியில் இந்துக்கள் தொடர்ந்து இழிவுப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் சோஷியல் மீடியாவில் கிளம்பி வருகின்றன.. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இதுவரை 100-க்கும் அதிகமான கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன என்றும், இந்து தெய்வங்கள் மீதான வெறுப்பு பிரச்சாரங்கள் நீண்டுகொண்டே போவதாகவும், நெட்டிசன்கள் காரசாரமாக விமர்சித்து வருகிறார்கள்.
-
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications