அண்ணன் தந்த மோதிரத்துடன் அவரை சென்றடைந்தார் கருணாநிதி
பெரிதும் நேசித்த அண்ணாவிடம் சென்றடைந்தார் கருணாநிதி.
Recommended Video

சென்னை: தாம் வாழ்நாளில் பெரிதும் நேசித்த அண்ணாவிடம் கருணாநிதி சென்றடைந்தார். தன் உயிர்பிரியும் நேரத்திலும் கூட அண்ணா அளித்த அந்த பொருளை தம்மிடமே கெட்டியாக வைத்திருந்தார் கருணாநிதி.
தி.மு.க. தேர்தல் நெருங்கி விட்டது. கையில் பணம் இல்லாமல் தவித்தார் அறிஞர் அண்ணா. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சத்தை வசூலித்துத் தந்தார் கருணாநிதி. இதனை பாராட்டி, அண்ணா, கருணாநிதிக்கு ஒரு கணையாழி (மோதிரத்தை) அணிவித்தார். இந்த மோதிரத்தை கருணாநிதி பெரிதும் மதித்தார். தன் வாழ்நாளில் அந்த மோதிரத்தை மட்டும் அவர் கழட்டியதே இல்லையாம்.

இதுகுறித்து பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு தயாளு அம்மாள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஒரு பேட்டி அளித்தபோது கூறுகையில், "அறிஞர் அண்ணா போட்ட மோதிரம் தான் இப்போது வரை அவரது விரலில் இருக்கு, இது தவிர வேறு யாரோ ஒரு சமயம் கொடுத்த பரிசான ஒரேயொரு பவள மோதிரம் மட்டும் போட்டிருக்கிறார். அவருக்கு நிறைய பேர் மோதித்தை பரிசாக கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எதையுமே போட்டதில்லை" என்றார்.
எப்போதுமே தனது கட்சியினரோ அல்லது நண்பர்களோ கூடவே இருக்க வேண்டும் என்று விரும்புவர் கருணாநிதி. அவர் இருக்கும் இடம் எப்போதுமே அரட்டைதான்... சிரிப்பலைதான்... எனக்கு விரோதியே தனிமைதான் என்று அடிக்கடி கூறும் கருணாநிதி... இன்று அந்த விரோதியிடமே அடைக்கலமாகி விட்டார். இனி மெரினாவின் மெளனமான உப்புக் காற்றுடன் கருணாநிதியின் தமிழ் கொஞ்சி விளையாடும்.. ஆனால் நாம் எப்போது அதை கேட்பது?
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications